Followers

Tuesday, June 19, 2018

சாமியா அல்லது ஆசாமியா?


வணக்கம்!
          ஒருவருக்கு கஷ்டகாலம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அப்பொழுது தான் ஞானயோதம் உருவாகும். உடனே உலகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஆரம்பித்துவிடுவார்.

ஒருவருக்கு கஷ்டம் தெரியாமல் இருந்துக்கொண்டு வருவார். ஏதோ கிரகங்களின் கோளாறு அவர் ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்வார். ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர்க்கு அப்பொழுது தான் கோவில்கள் எல்லாம் இருப்பது தெரியவரும். கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்துவிடுவார்.

ஒருவருக்கு கஷ்டகாலம் உருவாகிவிட்டால் அவர்க்கு பெரும்பாலான கிரகங்கள் எதிராக தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கோவிலுக்கு செல்ல ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கும். நல்ல வசமாக மாட்டிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

பின்பு எப்படி தான் இதனை சமாளிப்பது. இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. என்ன தான் நீங்கள் கடவுளை கும்பிட்டாலும் நடப்பது ஆசாமிகளின் கையில் தான் இருக்கின்றது. கடவுள் நேராக வந்து உங்களை காப்பாற்றபோவதில்லை. ஏதோ ஒரு மனிதனால் தான் அதனை செய்ய வைப்பார். சாமியை தேடுவதை விட்டுவிட்டு ஆசாமியை நாடினால் காரியம் நடக்கும்.

கஷ்டகாலத்தில் சாமியை நாடுவதைவிட ஆசாமி உங்களை காப்பாற்றுவார் என்று சொல்லுகிறேன். ஆசாமி அது ஆன்மீகவாதியாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களாக கூட இருக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: