வணக்கம்!
சென்னை சென்ற பொழுது நண்பர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அவர் ஒரு கேள்வியை முன் வைத்தார். திலாஹோமம் செய்தால் உடனே நமக்கு நல்லது நடக்குமா என்று கேட்டார்.
திலாஹோமம் செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது கிடையாது. எங்கோ வெப்சைட்டில் படித்துவிட்டு பலர் திலாஹோமம் செய்ய சென்று விடுகின்றனர் அல்லது யாராவது சோதிடர்கள் திலாஹோமம் செய்யுங்கள் என்று சொல்லுவதால் செய்கின்றனர்.
திலாஹோமம் செய்வது எல்லாம் வேண்டியதில்லை. ஒருவர் திலாஹோமம் செய்ய சென்றால் அவர் வாழ்வில் கடைசி நிகழ்வாக அதனை வைத்துக்கொள்ளலாம். இளமையில் இருக்கும் நபர்கள் திலாஹோமம் எல்லாம் செய்யவேண்டாம்.
உங்களுடைய வாழ்க்கையை நன்றாக வாழுங்கள். உங்களுக்கு எல்லாம் பேரன் பேத்திகள் வந்தபிறகு இதற்கு எல்லாம் நீங்கள் சென்று செய்துக்கொள்ளலாம். சும்மா இருந்துக்கொண்டு ஒரு சிலர் திருமணம் கூட செய்துக்கொள்ளாமல் திலாஹோமத்தில் எல்லாம் இறங்கவேண்டியதில்லை.
பொதுவாக உங்களின் கடமை எல்லாவற்றையும் செய்யவேண்டியது நீங்கள் இந்த பூமியில் மனிதபிறவி எடுத்ததின் அர்த்தம் தான் ஆனால் நீங்கள் எப்பொழுது செய்யவேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
திலாஹோமம் எல்லாம் வளர்ச்சிக்கு உதவாது அடுத்த பிறவி அல்லது இந்த பிறவி முடிந்து மோட்சத்திற்க்கு உதவது தான் திலாஹோமம் செய்யவேண்டும். அதனைவிட்டுவிட்டு வளர்ச்சிக்கு செய்கிறேன் என்று செய்யவேண்டாம்.
திலாஹோமம் செய்துவிட்டு அந்த வருடத்தில் மண்டையை போட்டவர்களும் இருக்க தான் செய்கின்றனர். கடமையை முடித்துவிட்டார் என்று எமனே அழைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
உங்களின் வளர்ச்சிக்கு பிற வழிபாடுகள் மற்றும் ஹோமங்களில் பங்களிப்பை அளியுங்கள் அல்லது நீங்களே செய்துக்கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு திலாஹோமம் செய்யவேண்டியதில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment