வணக்கம்!
நிறைய சிம்மராசி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இவர்களுக்கு கேது பகவான் கொஞ்சம் படுத்தி எடுக்கிறார் என்பதும் தெரிகிறது. நிறைய பேர்களுக்கு திருமணம் என்பது நடக்காமல் இருக்கின்றது. அப்படியே திருமணம் நடைபெற்றாலும் அவர்களுக்குள் சண்டை சச்சரவாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றது.
நான் பார்த்தவரையில் நிறைய நண்பர்கள் திருமணத்திற்க்கு போராட்டம் நடத்தி அதன் பிறகு திருமண வாழ்க்கை அமைகின்றது. ஒரு சிலர் அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் அதன்பிறகு திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இருப்பார்கள். இதனாலேயே திருமணம் நடைபெறாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.
சிம்மராசி உடையவர்கள் நிறைய பேர்கள் அரசாங்க வேலையில் இருப்பார்கள். இவர்களின் துணைவர்களுக்கு இவர்களுக்கும் ஏதோ வாழ்கிறோம் என்பது போலவே இருப்பார்கள். ஒரு இணக்கமான வாழ்க்கை என்பதை வாழவே மாட்டார்கள்.
மனது என்பது தான் வாழ்க்கை. இராசிக்கு ஏழாவது இடமாக சனிவீடு வருவதாலும் இவர்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமையலாம். சனியும் சூரியனும் ஒத்தவராது என்பதால் இரண்டும் சண்டை சச்சரவுகளிலேயே ஈடுபடலாம்.
சிம்மராசிக்கு கேது எந்த வீட்டில் இருக்கின்றார் என்பதையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேது எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொள்வது நல்லது.
சிம்மராசிக்கு வரன் வந்தால் உடனே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள். சிம்மராசியை வீட்டில் வைத்துக்கொண்டு பார்க்கலாம் பார்க்கலாம் என்று இருந்தால் திருமணமே நடக்காமல் கூட செல்வதற்க்கு வாய்ப்பு இருப்பதால் இதனை உங்களிடம் சொல்லுகிறேன்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திப்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments:
Post a Comment