வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க போவது திருமணத்தைப் பற்றி மக்கள் சோதிடரை வாழ்நாளில் பார்க்கபோவது திருமண ஏற்பாட்டுக்குதான் இருக்கும் மீதி பிரச்சினைகளுக்கு பார்க்க போவது கிடையாது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது அனைத்து பிரச்சினைகளுக்கும் செல்கிறார்கள். வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமண பயம் ஏற்படுகிறது.
நாட்டில் அதிக விவாகரத்து நடைபெறுகிறது எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது என்று மனதில் நினைப்பது. அந்த காலத்தில் விவாகரத்து குறைவு ஆனால் இந்த காலத்தில் விவாகரத்து அதிகமாக இருக்கிறது அதனால் திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது என்று என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களிடம் நான் சொல்வதை உங்களிடம் சொல்கிறேன்.
அந்த காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை குறைவுதான் அந்த காலத்தில் விவாகரத்து 1000 பேர்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவில் நடந்தது என்றால் இந்த நேரத்தில் 100000 பேர்களுக்கு நடப்பது குறைவுதான்.
ஏன் என்றால் அவ்வளவு மக்கள் தொகை இந்தியாவில் இருக்கிறது கணக்கு செய்து பார்த்தீர்கள் என்றால் ஆகா நான் சொல்லுவது சரியாகதான் இருக்கிறது என்று உங்கள் மனதில் என்ன தோன்றும். அந்த காலத்தில் மீடியா இல்லை இந்த காலத்தில் மீடியாகள் பலம் அதிகமாக இருக்கிறது. மீடியாக்கள் விவாகரத்தை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்துகிறது. அதை கண்டு நீங்கள் அதிகம் பயப்படுகிறீர்கள்.
தனக்கு வரவேண்டியவர் நன்றாக இருக்க வேண்டும். ஒழுங்கான நடத்தை உடையவராக இருக்கு வேண்டும் என்று இருவரும் நினைக்கிறார்கள். அதுவும் இன்றைய நாட்களில் பெண்களுக்கு தனக்கு வரவேண்டியவர் எந்த வித கெட்ட பழக்கமும் இருக்ககூடாது என்று நினைக்கிறாள்.
கை நிறைய அனைத்து வங்கியிலும் கணக்கு வைத்து நிறைய பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். குடி பழக்கம் இருக்கவே கூடாது என்று நினைக்கிறாள். அவளுடன் அவர்கள் பெற்றோர்களும் சகோதர்களும் இதை மாதிரி நினைக்கிறார்கள். நீங்களே பார்த்து இருக்கலாம் பல திருமண ஏற்பாட்டாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவார்கள் அதில் கலந்து கொள்பவர்களே பார்த்தாலே தெரியும்.
அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியை ஆனால் பிராக்டிகல பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் மது குடிக்காமல் இருப்பவர்கள் இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். மது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்க ஆரம்பித்துவிட்டது. எதில் எங்கு போய் குடிக்காத மாப்பிள்ளையை தேடுவது. அப்படி தேடினால் இந்த ஜென்மத்தில் திருமண முடியாது.
இது இப்படி இருக்க மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால் தனக்கு வரவேண்டிய பெண் அழகாக இருக்க வேண்டும். நல்ல படித்திருக்க வேண்டும் நடத்தையில் ஒழுங்காக இருக்க வேண்டும். நல்ல வரதட்சிணை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனக்கு வரும் மனைவி, நண்பர்கள் அமையும் குடும்பத்தார்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவன் எப்படி நாளும் இருக்கலாம் என்று அனைத்து தவறையும் செய்துக் கொண்டு இருப்பான். இந்த மாதிரியே ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதில் இயற்கை விளையாடி விடும். உங்களை ஏமாற்றி விடும். அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். திருமணத்தில் அதிக எதிபார்ப்பு இல்லாத மனிதர்களுக்கு அருமையான வாழ்க்கை அமைகிறது. இது அனுபவ உண்மை.
அடுத்தாக சோதிடத்தை பல Blog யிலும் படிக்கிறது . அதில் சொல்லப்பட்ட விதிகளை எடுத்துக்கொண்டு எனக்கு ஏழாம் வீட்டில் தீய கிரகம் இருக்கிறது. எனக்கு குடும்ப வீட்டில் தீய கிரகம் இருக்கிறது எனக்கு திருமண வாழ்க்கை அமையாது. குடும்பம் அமையாது, குழந்தைகள் அமையாது என்று இவர்களாகவோ நினைத்துக்கொண்டு அனைத்தையும் தள்ளி போடுகிறது இது ஒரு பழக்கம். கிட்டதட்ட முக்கால் வாசி கிரகங்களும் கெட்டால் கூட ஒன்று இரண்டு கிரகங்கள் உங்களுக்கு அனைத்தையும் பெற்று தந்துவிடும். அதை எல்லாரும் மறந்து விடுகிறார்கள்.
நாங்கள் சொல்லுவது எல்லாம் பொதுவிதிதான் நடக்கலாம் நடக்காமல் போகலாம். இதைப்பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. ஒன்பது கிரகமும் ஏதாவது ஒர் இடத்தில் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஏழில் அமைந்தால் என்ன இரண்டில் அமைந்தால் என்ன இறைவன் இருக்கிறான் அனைத்தையும் அவன் பார்த்துகொள்வான் என்று நினைத்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.
கிரகங்களே ஆட்டி வைப்பவனை நாம் பிடித்துக்கொண்டால் அனைத்தையும் வென்று விடலாம் அதை விட்டு விட்டு இதனை கண்டு பயப்படாதீர்கள்.
சோதிடம் கற்பவர்களை பார்த்தீர்கள் என்றால் அதிகபடியான நபர்களுக்கு குரு திசை தான் நடக்கும்.
இல்லை என்றால் ஏதாவது ஆன்மீகம் சார்ந்த திசை நடக்கலாம். இந்த திசைகள் நடக்கும் போது உங்களுக்கு சோதிடத்தின் மீது ஈர்ப்பு, ஆன்மீக விஷயத்தில் ஈர்ப்பு சன்யாசத்தின் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதனாலே நான் சன்யாசியாக போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அழைவீர்கள். எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்வீர்கள்.
குரு திசை முடிந்து சனி திசை ஆரம்பம் ஆனது என்றால் சாமியாவது சன்யாசியாது என்று மனது நினைக்க தோன்றும். ஏதாவது ஒரு பெண்னுடன் இருந்தால் என்ன என்று மனது நினைக்க தோன்றும். பல கெட்ட எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். போகும் திசை எல்லாம் மாறிவிடும்
சன்யாசி வாழ்க்கை என்பது லட்சத்தில் ஒருவருக்கு அமையும். சன்யாசி இந்தியாவில் விரல் விட்டு எண்ணிவிடலாம். சம்சாரியை கணினியால் கூட எண்ணமுடியாது. சம்சாரி வாழ்க்கை அவ்வளவு ஜாலி. உங்களை சுற்றி சம்சாரிகள் தான் இருப்பார்கள் சன்யாசி கிடையாது. அதனால் திருமணத்தை கண்டு பயம் வேண்டாம்.
திருமண ஏற்பாட்டின் போது சில தடைகள் இருக்க செய்யும் அதை ஒரு சில பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம். தடை இருப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். பரிகாரம் செய்து தருகிறேன். பணம் இருப்பவர்களிடம் பணத்தை வாங்குகிறேன். இல்லாதவர்களுக்கு அந்த பணம் மூலம் இலவசமாக செய்து தருகிறேன்.
திருமணத்தை பற்றி நிறைய எழுத வேண்டியது உள்ளது அதை நேரம் கிடைக்கும் போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வளவு நேரம் எனக்காக செலவு செய்து படித்ததற்க்கு மிக்க நன்றி.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வாத்தியார் ஐயா விற்கு அடியவனின் முதற்க்கண் வணக்கம்.
மிக அவலொடு எதிர்பார்த பகுதி இது குருவே!
நீங்கள் சொல்வது 100% உன்மை. திருமணம் நடப்பதே மிக மிக பாக்கியம் ஆனால் இப்பொது அந்த பாக்கியம் பல பேருக்கு கிடைகாமல் பொகிறது. சந்திரன் குடும்ப காரகன். சந்திரன் நன்றாக இருந்தாலெ குடும்பம் அமையும். சுக்கிரன் களத்திர காரகன் அவர் நன்றாக இருந்தாலெ மனைவி அமைவாள். சந்திரனுக்கு பகை ராசியே இல்லை அதலால் எல்லொர்கும் குடும்பம் அமையும். உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி. விரிவான உதாரனஜதகத்தொடு பரிகரத்தையும் நடத்தினால் உபயகமாக இருக்கும்.
நேரம் கிடைத்தால் இந்த சந்தெகங்களை தீர்கும் படி மிக தழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
1.ஒரு கிரகத்தின் சாரம் என்றால் என்ன? அதை எப்படி பார்பது, அந்த கிரகம் அமரும் நட்சத்திரம் தான் அதன் சாரமா? குருவே ஒரு கிரகம் ஒரு விட்டில் அமரும் பொது அந்த வீட்டின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
2.அந்த கிரகத்தின் ஆதிபத்தியத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
3.அந்த கிரகத்தின் பார்வை எத்தனை சதவித பலனை தரும்?
4.அது அமரும் நட்சத்திர நாதனின் பலன் எத்தனை சதவிதமாக இருக்கும்?
5.அது பெறும் சாரத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
உங்கள் பதிலை அவலொடு எதிர்பக்கிறென்
Post a Comment