சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.
இவர் அசுர குரு. காமத்திற்க்கு, வாகனம், ஆடை ஆபரணம், வாசனை திரவியங்கள், அலங்காரம், படுக்கைசுகம், துள்ளும் இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி கொண்டு வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. ஒரு ராசியில் 1 மாதம் சஞ்சாரம் செய்வார்.
நிறம் - வெண்மை
தேவதை - இலட்சுமி, இந்திராணி
பிரத்யதி தேவதை - இந்திரன்
இரத்தினம் - வைரம்
மலர் - வெண்தாமரை
குணம் - சௌம்யன்
ஆசன வடிவம் -ஐங்கோணம்
தேசம் - காம்போஜம்
சமித்து - அத்தி
திக்கு - கிழக்கு
சுவை - இனிப்பு
உலோகம் - வெள்ளி
வாகனம் - கருடன்
பிணி - சீதளம்
தானியம் - மொச்சை
காரகன் - களத்திரம்
ஆட்சி - ரிஷபம், துலாம்
உச்சம் - மீனம்
நீசம் - கன்னி
மூலத்திரிகோணம் - துலாம்
உறுப்பு - முகம்
நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
பால் - பெண்
திசை காலம் - 20 வருடங்கள்
கோசார காலம் -1 மாதம்
நட்பு - புதன், சனி, இராகு, கேது
பகை - சூரியன், சந்திரன்
சமம் - செவ்வாய், குரு
உபகிரகம் - இந்திர தனுசு
ஸ்தலம் - கஞ்சனூர்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment