Followers

Sunday, April 8, 2012

சூரிய பகவான் பயோடேட்டா




சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார் . அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் காடு மலை புகழ் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.

சூரியன் இயற்கையிலே பாபர் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார்.


நிறம் - சிகப்பு

தேவதை - அக்கினி

பிரத்யதி தேவதை- ருத்திரன்

இரத்தினம்- மாணிக்கம்

மலர் - செந்தாமரை

குணம் -தாமஸம்

ஆசன வடிவம் - வட்டம்

தேசம் -கலிங்கம்

சமித்து -எருக்கு

திக்கு - நடு

சுவை -காரம்

உலோகம்- தாமிரம்

வாகனம் - தேர் மயில்

பிணி- பித்தம்

தானியம் - கோதுமை

நட்பு - சந்திரன் வியாழன் செவ்வாய்

பகை - சுக்கிரன் சனி ராகு கேது

சமம் - புதன்

ஆட்சி- சிம்மம்

நீசம் -துலாம்

உச்சம் - மேஷம்

மூலத்திரிகோணம் - சிம்மம்

உறுப்பு - மார்பு

நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

பால் - ஆண்

திசை காலம் - 6 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்

உபகிரகம் - காலன்

ஸ்தலம் - சூரியனார் கோவில்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: