Followers

Tuesday, April 10, 2012

புதன் பகவான் பயோடேட்டா



புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்களைப் பற்றி சோதிடத்தில் புதனை வைத்துதான் கணிக்கப்படுகிறது. புதன் ஒரு அலிக்கிரகம் ஆகும். புதன் ஆண் கிரகங்களோடு சேரும் போது ஆண் தன்மையும் பெண் கிரகங்களோடு சேரும் போது பெண் தன்மையும் அடைகிறது.

சேரும் இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். சோதிடம், பச்சை நிறம்,எல்லா நேரத்திலும் வலிமையுடைவர், பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கபடம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.

புதனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. 1,4,7,10 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் வலிமையுடன் இருப்பார்.

நிறம் - பச்சை

தேவதை - விஷ்ணு

பிரத்யதி தேவதை - நாராயணன்

இரத்தினம் - மரகதம்

மலர் - வெண்காந்தாள்

குணம் - சௌம்யன்

ஆசனவடிவம் - அம்பு

தேசம் - மகதம்

சமித்து - நாயுருவி

திக்கு - வடகிழக்கு

சுவை - உவர்ப்பு

உலோகம் - பித்தளை

வாகனம் - குதிரை

பிணி - வாதம்

தானியம் - பச்சைப் பயறு

காரகன் - தாய்மாமன், கல்வி

ஆட்சி - மிதுனம், கன்னி

உச்சம் - கன்னி

நீசம் - மீனம்

மூலத்திரிகோணம் - கன்னி

உறுப்பு - கழுத்து

நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி

பால் - அலி

திசைகாலம் - 17 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்

நட்பு - சூரியன்

பகை - சந்திரன்

சமம் - செவ்வாய், வியாழன், சனி, இராகு, கேது

உபகிரகம் - அர்த்தப்பிரகரணன்

ஸ்தலம் - திருவெண்காடு.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

Ananthamurugan said...

உபயோகமான செய்திகள்...!நன்றி !!

rajeshsubbu said...

// Ananthamurugan said...
உபயோகமான செய்திகள்...!நன்றி !! //

வருக தங்கள் வருகைக்கு நன்றி

Rajaram said...

நண்பருக்கு வாழ்த்துக்கள் நான் கடந்த 2 நாள்களாக தங்களது வலைப்பூவிற்கு வந்து செல்கிறேன். நல்ல உபயோகமான பல செய்திகளை வழங்குகிறீர்கள்.தொடரட்டும் தங்களது பணி.

rajeshsubbu said...

//* Rajaram said...
நண்பருக்கு வாழ்த்துக்கள் நான் கடந்த 2 நாள்களாக தங்களது வலைப்பூவிற்கு வந்து செல்கிறேன். நல்ல உபயோகமான பல செய்திகளை வழங்குகிறீர்கள்.தொடரட்டும் தங்களது பணி. *//

வருக தங்கள் வருகைக்கு நன்றி . உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.