Followers

Tuesday, April 3, 2012

கோச்சார பலன் சூரியன் நிறைவு பகுதி



ஏழாம் வீட்டிற்க்கு சூரியன் வரும்போது ஏழாம் வீடு என்பது உங்களின் துணையை காட்டும் இடம் அதனால் துணையின் மூலம் பிரச்சினை ஏற்படும். இரண்டு பேரும் சண்டை இட்டு் கொள்வார்கள். ஏழாம் இடம் நீங்கள் கூட்டு்தொழில் செய்தால் அவரிடன் சுமுகமான உறவு இருக்காது இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை செய்து கொள்வீர்கள். உடல் உஷ்ணம் ஏற்பட்டு நோய் தொல்லை ஏற்படும்.

எட்டாம் வீட்டிற்க்கு சூரியன் வரும் போது பொருள் நஷ்டம் ஏற்படும். எட்டாம் வீடு என்பது ஓன்பதாம் வீட்டிற்க்கு பன்னிரண்டாம் வீடாக வருவதால் தந்தை உடல் நலம் பாதிக்கப்படும். தந்தைக்கு சூரியன் காரணம் வகுப்பதால் அவரை விரயஸ்தானத்தில் அமர்வதால் தந்தையை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்து விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஒன்பதாம் வீட்டிற்க்கு சூரியன் வரும்போது செலவுகள் அதிகமாக வரும். மனதில் நிம்மதி இருக்காது. அதிக அலைச்சல்களை சந்திக்கலாம். எதிர்பாராத வகையில் வெளிநாட்டு நபர்கள் மூலம் உதவி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் ஆதரவு தருவார்கள். புது நண்பர்கள் ஏற்படுவார்கள் அவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

பத்தாம் வீட்டிற்க்கு சூரியன் வந்தால் பத்தாம் வீடு நாம் செய்யும் தொழில்களை காட்டும் இடம் என்பதால் தொழிலில் தடங்கல் ஏற்படும். மூத்த சகோதரர்களை காட்டும் வீடு பதினொன்றாம் வீடு என்பதால் மூத்த சகோதர்கள் ஒருவருக்கு நீங்கள் செலவு செய்ய நேரிடும். வீண் செலவு வரும். அரசாங்கத்தின் மூலம் பிரச்சினை வரும். இவ்வளவு பிரச்சினையை சூரியன் தருவார். ஆனால் ஒரு விஷயத்தில் ஆதரவு தருவார் எந்த விஷயத்தில் என்றால் வீட்டில் உள்ளவர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள் அப்புறம் என்ன எதையும் சமாளிக்கலாம்.

பதினொன்றாம் வீட்டிற்க்கு சூரியன் வரும் போது நல்ல லாபம் கிடைக்கும். சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் என்பதால் லாப வீட்டிற்க்கு வருவதால் அரசாங்கத்தில் ஏதும் வேலை இருந்தால் இந்த நேரத்தில் ஈடுபட்டால் நல்ல விதத்தில் முடிந்து லாபம் கிடைக்கும். மூத்த சகோதர்கள் ஆதரவு தருவார்கள். பதினொன்றாம் வீட்டிற்க்கு சூரியன் வரும் போது அனைத்திலும் லாபம் கிடைக்கும்.

பன்னிரண்டாம் வீட்டிற்க்கு சூரியன் வரும் போது செலவு அதிகமாக இருக்கும். பன்னிரண்டாம் வீடு விரைய ஸ்தானம் ஆக இருப்பதால் குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்பட்டு மருத்துவனை செலவு அதிகமாக இருக்கும். சுற்றத்தார்கள் தொல்லை தருவார்கள். செலவு அதிகமானலே மனநிம்மதி போய்விடும். ஏதாவது பிறபெண்கள் தொடர்பு இருந்தால் அவர்கள் மூலம் நிம்மதி போய்விடும். மொத்தத்தில் பன்னிரண்டாம் வீட்டிற்க்கு சூரியன் வரும் போது பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: