Followers

Saturday, April 14, 2012

வேணாம் மச்சான் வேணாம்



வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ராஜா இந்த பெயருக்கு ஏற்றார் போல் ராஜாகவே இளமையில் இருந்தார். வீட்டில் ஒரே பையன் செல்லமாக செல்வ செழிப்பில் வாழ்ந்தார்.

இளமை காலம் ஆரம்பம் ஆனது. இளமையில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் பருவ காலம் சில்மிசங்கள் இவருக்கும் பிடித்த ஆட்டம் போட வைத்தது.

இவருடைய வாழ்வில் முதல் முறையாக சரளா என்ற பெண் வந்தாள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் இவனை நண்பனாகத்தான் பார்த்தது ஆனால் இவனே காதலாக பார்த்தான்.

ஆனால் இவன் காதலை அவளின் சொல்வதற்க்கு மன தயக்கம். பள்ளியில் படித்ததால் இருக்கலாம். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் பார்த்தால் தெரியும் அனைத்து வேளையும் எட்டாம் கிளாஸ்யிலே முடித்துவிடுகிறார்கள்.

நம் கதையில் வரும் கதாநாயகன் வாழ்வில் நடந்தது 20 வருடங்களுக்கு முன்பாக. இப்பொழுது இருக்கும் வசதிகள் அந்த நேரத்தில் இல்லை . சரி மேட்டருக்கு வருகிறேன். இருவரும் பள்ளி படிப்பை முடித்து விட்டார்கள். ஆனால் இவர் கடைசி வரை நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொல்லவே இல்லை.

பத்தாவது தேர்வை முடித்துவிட்டார்கள். இருவரும் ஒரே பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கூடத்திற்க்கு சென்றுவிட்டார்கள். நம்ம ராஜா அவள் படிக்கும் பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்று சொல்லி அவருடைய அப்பாவிடம் பல போராட்டங்கள் நடத்தி பார்த்தார். கடைசி வரை முடியவில்லை .

இவர் சென்ற பள்ளியில் 11 வகுப்பில் படிக்கும் போது இவர் தங்கி இருக்கும் ஊரில் தேவி என்ற பெண் ஒருத்தி இருந்தால் அவரிடம் இவர் காதல் வயப்பட்டார். அவள் பின்னாடி சுற்றினார். கிட்டதட்ட இரண்டு வருட காலம் சுற்றினார். காதலை சொல்லவில்லை. இவருக்கு 12 வகுப்பு இறுதி தேர்வு நடக்க 20 நாட்கள் மட்டும் இருந்தது அந்த நேரத்தில் இவரிடம் விதி விளையாடியது காதலை தேவியிடம் சொன்னார். அவ்வளவு தான்.

இவரின் காதலை அவள் ஏற்றக்கொள்ளவில்லை . நம்ம ஆள் மனமுடைந்து கிட்டதட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தார். விளைவு 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியை தழுவினார்.

அதனால் டுடோரியல் காலேஷ் சென்று படிக்க ஆரம்பித்தார். அங்கு சென்றும் இவர் சும்மாக இருக்கவில்லை மறுபடியும் வேறு ஒரு பெண் வந்தால் அவளிடம் இவர் பழக ஆரம்பித்தார். உடனடியாக காதலை சொன்னார் அந்த பெண் இவர் காதலை ஏற்றுக்கொண்டாள். இவருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. வாழ்க்கையில் ஒரு பெண் தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டால் என்று மிகுந்த மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சென்றது.

இந்த நேரத்தில் டுடோரியல் சென்டர் நிர்வாகத்திற்க்கு இந்த விஷயம் தெரிந்து இருவரையும் கண்டித்து பார்த்தார்கள். அதில் இந்த பெண் அந்த டுடோரியல் சென்டரில் இருந்து வேறு டுடோரியல் சென்று விட்டால் ஆனால் இவர் செல்லவில்லை அந்த பெண்னை இவர் அடிக்கடி சந்திப்பது நடந்தகொண்டே இருந்தது.

அந்த பெண் இவரை கழட்டிவிட்டு வேறு ஒரு பையனேடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் நம்ம ஆள் சும்மாக விடவில்லை நேரிடாக அவளின் அப்பாவிற்க்கு அனைத்து விபரத்தையும் நேரடியாக போய் செல்லிவிட்டான்.

அப்பா சும்மா விடுவாரா. இவனையும் திட்டி நீ எல்லாம் உருபடவே மாட்டாய். அவளை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் அது பெரிய பிரச்சினையாகி அந்த பெண்க்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்துவிட்டார்கள்.

நம்ம ஆள் பல பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இதே மாதிரி பழி வாங்குவது இவரின் வேலையாகவே வைத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக எந்த பிரச்சினைக்கும் செல்வதில்லை. என்ன இன்னமும் திருமணம் நடைபெறவில்லை.

இவரின் வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இவருடை லக்கனம் மகரம் மூன்றாம் வீட்டில் கேது பகவான். ஆறாம் வீட்டில் குரு பகவான் பன்னிரண்டாம் வீடு தனசு வீடாக வருகிறது. இவர் பள்ளி படிக்கும் காலத்தில் ராகு திசை ஆரம்பம் ஆனாது. ராகு திசை வந்தாலே பிரச்சினை தான். அதனாலே வாழ்க்கை திசை மாறியது. ராகு திசை காம விஷயத்தில் மிக பெரிய தாக்கத்தை கொடுத்துவிடும். அதினாலே சீரளிந்து விடுவார்கள்.

குரு திசை ஆரம்பத்தில் பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டது ஏன் என்றால் குரு மூன்றாம் வீட்டிற்க்கு ஆறாம் வீட்டிற்க்கு பன்னிரண்டாம் வீட்டிற்க்கு காரகம் வகிக்கிறார். குரு மூன்று வீட்டு பலனையும் கொடுக்க வேண்டும். காமத்திற்க்கு மூன்றாம் வீடு விரோதிக்கு ஆறாம் வீடு பழிவாங்குவதால், விரையம் ஏற்படுகிறது அதற்கு பன்னிரண்டாம் வீடு மூன்று வீட்டின் பலன்களும் கச்சிதமாக நடந்தது. இவர் 33 வயது வரை இந்த மாதிரி செய்து வந்தார்.

ஆனால் நாம் அவனை சும்மா பார்க்கும் போது என்ன சொல்லுவோம். அவன் ரொம்ப திமிர் பிடித்தவன் எதற்க்கும் லாயக்கற்றவன் என்று சொல்லுவோம். அவனுடைய ஜாதகத்தில் இப்படி இருக்கும் போது என்ன செய்வது.

இந்த மாதிரி நீங்கள் இருக்கலாம் அல்லது உங்கள் நண்பர்கள் இருக்கலாம், உங்கள் குடும்பத்தில் உங்கள் மகன் அல்லது மகள் இருக்கலாம் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறியதற்கு திசை மாறுவதற்க்கு திசை மாறபோவதற்க்கு காரணம் சோதிடத்தில் இந்த மாதிரி சில கிரகங்களின் கோளாறு தான் காரணமாக இருக்கும்.

பலபேர்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை நான் சோதிடம் மூலம் செய்து கொடுத்துள்ளேன். உங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தால் அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

6 comments:

Krish said...

வணக்கம், ராகு பத்தாம் வீட்டிலும்(கடகத்திலும்) கேது வளர்பிறை சந்திரனோடும்(மகரத்தில்-ஜென்ம ராசி) கூடியிருத்தால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும்

rajeshsubbu said...

//* Krish said...
வணக்கம், ராகு பத்தாம் வீட்டிலும்(கடகத்திலும்) கேது வளர்பிறை சந்திரனோடும்(மகரத்தில்-ஜென்ம ராசி) கூடியிருத்தால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் *//

வணக்கம் நண்பரே தங்கள் வருகைக்கு நன்றி. முழு ஜாதகத்தையும் பார்த்தால் தான் பலன் முழுமையாக தெரியும். கேள்விக்கு பதில் பத்து கேள்வி வந்த பிறகு பதிவாகவே போடுகிறேன். அதுவரை பொறுமை காக்கவும் நன்றி.

seethalrajan said...

வணக்கம்! superb lesson and clear explanation. one doubt 3rd and 12th lord Jupiter in 6th place. It it VRY. Why it is not give good results? Please explain.

rajeshsubbu said...

//* seethalrajan said...
வணக்கம்! superb lesson and clear explanation. one doubt 3rd and 12th lord Jupiter in 6th place. It it VRY. Why it is not give good results? Please explain. **/
தங்கள் வருகைக்குக்கு நன்றி
குரு திசை சுயபுத்தியில் கெடுதல்கள் செய்தது. எந்த ஒரு கிரகமும் சுயபுத்தியில் கெடுதல்கள் செய்வது நல்லது. அதற்கு அடுத்தவரும் புத்தி நல்லது செய்யும்.

தெண்டபாணி தம்பியப்பன் said...

ஒரு ஜோதிடர் இவ்வளவு இலவச சேவைகள் செய்வது கிடையாது ஆனால் நீங்கள் செய்யும் சேவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனது பாராட்டுக்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

Unknown said...

கார்த்திகை(ரிஷபம்) சிம்ம லக்னம், 1இல் குரு சுக்கிரன் 2இல் சூரியன் புதன் செவ்வாய் 5இல் சனி ராகு 10இல் சந்திரன் 11இல் கேது..... 1இல் குரு சுக்கிரன் செருந்து இருப்பது நன்மையா..? 2ஆம் வீடு , 5ஆம் வீடு நன்றாக இருகிறதா? (ராகு திசை/ புத்தி)