Followers

Monday, April 9, 2012

செவ்வாய் பகவான் பயோடேட்டா



செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாய்யின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரணகர்த்தாவக இருக்கிறார்.

சகோதரம் வீரம், வெட்டுக்காயம், தீ காயம் , விபத்தில் இரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளி ஏறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம்.

செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2,4,7,8,12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். 3,6,11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.

நிறம் - சிவப்பு

தேவதை - முருகன்

பிரத்யதிதேவதை - பிருத்வி

இரத்தினம் - பவளம்

மலர் - செண்பகம்

குணம் - குருரன்

ஆசனவடிவம் - முக்கோணம்

தேசம் - அவந்தி

சமித்து - கருங்காலி

திக்கு - தெற்கு

சுவை - துவர்ப்பு

உலோகம் - செம்பு

வாகனம் - அன்னம்

பிணி - பித்தம்

தானியம் - துவரை

காரகன் - சகோதரம், பூமி, வீடு, கனரக வாகனம்

ஆட்சி - மேஷம், விருச்சகம்

உச்சம் - மகரம்

நீசம் - கடகம்

மூலத்திரிகோணம் - மேஷம்

உறுப்பு - தலை

நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

பால் - ஆண்

திசைகாலம் - 7 ஆண்டுகள்

கோசார காலம் 1 1/2 மாதம்

நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்

பகை - புதன், இராகு, கேது

சமம் - சுக்கிரன், சனி

உபகிரகம் - தூமன்

ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: