Followers

Friday, April 6, 2012

பரிகாரம்



வணக்கம் நண்பர்களே !!

இந்த பதிவில் நாம் பார்க்க போவது பரிகாரத்தை பற்றி தான். விதி வலியது என்பார்கள். இதனை மீற முடியாது என்றும் எல்லாரும் கூறுவார்கள். கடவுள் இந்த பிறப்பில் நாம் என்ன செய்ய வேண்டுமென முன்னரே தீர்மானித்தே நமது பிறப்பை உண்டு செய்கிறார்.

விதியையே மீற செய்ய மனிதனை தூண்டுவதும் விதிதான்.

நமக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அந்த பிரச்சினையை சமாளிக்க நாம் ஏதாவது முயன்று எதைச் செய்தாலும் அதுவும் விதிதான். ஒரு பிரச்சினை வருகிறது இந்த பிரச்சனை விதியால் தான் வந்தது என்று பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. அதற்காக மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று செய்ய விளைகிறான் இதுவே பரிகாரம்.

மனிதன் இந்த கோவிலுக்கு போனால் இந்த பிரச்சினை தீரும் என்று கோவிலுக்கு போகிறான். இதுவும் பரிகாரமே. அப்படி எல்லாம் நடைபெறவில்லை என்றால் ஒரு பயலும் கோவிலுக்கு போக மாட்டான். உலகத்தில் கோவிலே இருக்காது.

அதனால் அந்த விதியை வெல்ல மனிதனுக்கு கடவுள் வழி சொல்லுகிறார். அதனை பயன்படுத்தி வெல்லலாம். இந்த பிரச்சினை வர போகிறது என்று முன்கூட்டியே சோதிடத்தில் பார்த்து முயற்சி செய்து வெற்றி பெற்றால் விதியை வெல்லலாம்(Condition Apply).

ஒவ்வொரு தோசத்திற்க்கும் பரிகாரம் செய்து தோசநிவர்த்தி செய்வது கூட அந்த ஜாதகப்படி தான் அமையும். ஜாதகத்தில் வழி இருந்தால் மட்டும் தான் சாத்தியப்படும். இல்லை என்றால் முடியாது. எப்படி சாத்தியப்படும் என்று நல்ல கை தேர்ந்த சோதிடர்களால் மட்டுமே பார்க்க முடியும்.

பரிகாரம் எத்தனை வகை என்று நமது சோதிட சாஸ்திரங்கள் என்று கூறுகின்றன.

அவை

1.ஒளஷதம்
2.மணி
3.மந்திரம்

1.ஒளஷதம் என்பது மருந்து. உணவே மருந்து. நாம் எந்த கிரகத்தில் பாதிக்கபட்டுள்ளோம் என்று பார்த்து அந்த கிரகத்தின் காரத்துவம் வாய்ந்த உணவை உண்ணலாம். எ.கா சனியால் பாதிக்கப்பட்டால் கசப்பு தரும் உணவை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். குருவினால் பாதிக்கப்பட்டால் கொண்டைகடலையை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

2 மணி என்றால் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்க்கு சம்பந்தப்பட்ட நவரத்ன கற்களை அணிவது இது ஒருவகை பரிகாரம்.

3.மந்திரம்

மந்திர வகையில் மூன்று வகையான மந்திரங்கள் உள்ளன. அவையாவன 1. வேத மந்திரங்கள். 2. ஸ்தோத்திர மந்திரங்கள் 3. தாந்திர மந்திரங்கள்

1. வேத மந்திரங்கள்

நல்ல மந்திரம் தெரிந்த வேத விற்பன்னர்கள் மூலம் யாகம் வளர்த்து பாதிக்கப்பட்ட கிரகத்திற்க்கு சாந்தி செய்வது ஆகும்.

இன்றைய நாளில் ஒழுங்காக மந்திரம் உச்சரிப்பு செய்யும் வேதவிற்பன்னர்கள் குறைவுதான். நல்ல மந்திரம் சொல்லும் வேதவிற்பன்னர்கள் கேட்கும் பணத்தொகை. உங்களிடம் ஏதும் நிலம் இருந்தால் அந்த நிலத்தை விற்றால் என்ன கிடைக்குமோ அந்த தொகையை அவர்களுக்கு நீங்கள் தரவேண்டும்.

2 ஸ்தோத்திர மந்திரங்கள்

நீங்களே எந்த கிரகத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களோ அந்த கிரகத்தின் ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது.

3 . தாந்திரிக மந்திரங்கள்

ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு இஷ்டதேவதை இருக்கும் அந்த தேவதையை அழைத்து சாந்தம் செய்து அந்த கிரகத்தின் உக்கிரத்தை குறைப்பது. வேத மந்திரங்கள் ஸ்தோத்திர மந்திரங்கள் நீங்களே செய்யலாம் ஆனால் தாந்திரிக மந்திரங்களை தகுந்த பயிற்சி செய்யாமல் செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள் உயிருக்கு உலை வைத்துவிடும்.

பரிகாரம் செய்வது உங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம் நம்பிக்கையுடன் செய்தால் காரியம் வெற்றி இல்லை என்றால் கடவுளே நேரில் வந்து செய்தாலும் வீண்தான்.

அடுத்ததாக ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் 48 நாள்கள் நல்ல முறையில் விரதம் இருந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லையேன்றால் ஒரு மண்டலத்திற்க்கு வாரம் ஒரு நாள் அந்த கிரகத்தின் நாள்கள் மட்டும் விரதம் இருந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் போது இருவேளை உணவு உட்கொள்ளாதீர்கள். ஒரு வேளை மட்டும் உணவை கடவுளக்கு படைத்துவிட்டு உணவை உட்கொள்ளுங்கள். உடல்நிலை சரியில்லை என்றால் பழ வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

வாழைபழத்தை எடுத்துக்கொள்ளலாம் ஏன் என்றால் பழவகையில் வாழைபழத்தில் பாவம் கிடையாது. வாழைபழத்தில் விதைகள் இருக்காது அதன் மூலம் ஒரு உயிர் உருவாகாது. அதனால் விரத நாட்களில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்கு செல்லும்போது முடிந்தவரையில் எளிமையாக செல்வது சிறப்பு. இதைப்பற்றி விலாவரியாக எழுத விரும்பவில்லை எளிமை என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: