Followers

Thursday, April 12, 2012

சனி பகவான் பயோடேட்டா





சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.

இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை , இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.

நிறம் - கறுப்பு

தேவதை - யமன்

பிரத்தியதி தேவதை -பிரஜாபதி

இரத்தினம் - நீலக்கல்

மலர் - கருங்குவளை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - வில்

தேசம் - சௌராஷ்டிரம்

சமித்து - வன்னி

திக்கு - மேற்கு

சுவை - கசப்பு

உலோகம் - இரும்பு

வாகனம் - காகம்

பிணி - வாதம் ,வாய்வு

தானியம் - எள்

காரகன் - ஆயுள்

ஆட்சி - மகரம், கும்பம்

உச்சம் - துலாம்

நீசம் - மேஷம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - தொடை

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பால் - அலி

திசை காலம் - 19 வருடங்கள்

கோசார காலம் - 2 1/2 வருடம்

நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - வியாழன்

உபகிரகம் - குளிகன்

ஸ்தலம் - திருநள்ளாறு .

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: