Followers

Tuesday, April 10, 2012

குரு பகவான் பயோடேட்டா



குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்று அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர். சும்மாவாக சொன்னார்கள் குரு பார்க்க கோடி நன்மை என்று. அனைத்து பிரச்சினையும் குருவை கொண்டு போக்கிவிடலாம்.

புத்திரர், நல்ல அறிவு, மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர், சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.

குரு அமர்ந்த இடம் பாழாகிவிடும். 5,7,9 பார்வை உண்டு.

நிறம் - மஞ்சள்

இரத்தினம் - புஷ்பராகம்

மலர் - முல்லை

குணம் - சத்துவ

தேவதை - தெஷ்ணாமூர்த்தி, நான்முகன், இந்திரன்.

பிரத்யதி தேவதை - நான்முகன்

ஆசன வடிவம் - செவ்வகம்

தேசம் - சிந்து

சமித்து - அரசு

திக்கு - வடக்கு

சுவை - இனிப்பு

உலோகம் - பொன்

வாகனம் - யானை

பிணி - வாதம்

தானியம் - கொண்டைகடலை

காரகன் - புத்திரம், தனம்

ஆட்சி - தனுசு, மீனம்

உச்சம் - கடகம்

நீசம் - மகரம்

மூலத்திரிகோணம் - தனுசு

உறுப்பு - வயிறு

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பால் - ஆண்

திசை காலம் - 16 வருடங்கள்

கோசார காலம் - 1 வருடம்

நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகை - புதன், சுக்கிரன்

சமம் - சனி, இராகு, கேது

உபகிரகம் - எமகண்டன்

ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: