வணக்கம் நண்பர்களே!
ஆன்மீகம் என்பது விலை மதிப்பில்லாத உயிரை உடலில் இயன்ற வரையில் விரும்பிய காலம் வரை நீட்டித்து வைத்திருக்கக் கூடிய வழிமுறைகளை யோக நெறிகளைக் கற்றுத்தருகிற வாழ்க்கை முறையாகும். நெறிகளைக் கற்றுத்தருகிற வாழ்க்கை முறையாகும்.
ஒளிவடிவமாக இருக்கும் சூரியனிடம் எப்படி இருட்டு இல்லையோ அதைப்போலவே அறிவு வடிவமான ஆன்மாவில் அஞ்ஞானத்திற்க்கு இடம் இல்லை.
பற்றற்ற வாழ்வுக்கு ஆன்மீகப் பயிற்சி அவசியம் பெறவேண்டும். ஆன்மீகம் என்பது வாழ்க்கையை மறுதலிப்பதல்ல மாறாக ஏற்றுவதுமல்ல சமுதாய வாழ்வு சிதறுண்டு கிடக்கும் சூழ்நிலையில் போட்டி பிணக்கு போர் அச்சம் போன்று பல கோண துயரழுத்தங்களால் அறிவின் நிலை தடுமாறி உணர்ச்சி வேகம் என்ற கடலில் இருந்து நீந்திக் கரையேற முடியாமல் மக்கள் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையிருந்து மீண்டு அமைதிக்காண வேண்டுமானால் ஆன்மீக அறிவு ஒன்று தான் வழிகாட்டியாக அமையும். ஆன்மீக வாழ்வு என்பது நான் என்ற தன் முனைப்பு நீங்கிய நிலையாகும். தன்னைத் தானே அறியும் அகநோக்குப் பயி்ற்சி மூலம் இயக்கமாகவும் இருப்பாகவும் இருப்பது ஒரே சக்தி என்பதையும் அதே சக்தி தான் தன்மாற்றம் பெற்றுக் கோடான கோடி உடலியக்க உருவங்களில் அவற்றிக்கு ஏற்ற அறிவியலக்கமாகச் செயல்படுவதை உணர்வதாகும்.
இந்நிலையில் பேரறிவு எனப்படும் அறிவாக இயங்கும் சக்தியே மூலமாகும் ஆதியாகவும் இருக்கிறது என்றும் அதன் பின்பங்களே பிரபஞ்சங்கள் அனைத்தும் என்று உணர்ந்து எல்லோருடமும் அன்பு செலுத்தி வாழ்வதாகும். இறைமையை ஒவ்வொரு உயிரினும் காணபதாக அமைகிறது ஆன்மீகம் என்பது அதிசயத்தை தாண்டியது.
நன்றி நண்பர்களே !
இந்நிலையில் பேரறிவு எனப்படும் அறிவாக இயங்கும் சக்தியே மூலமாகும் ஆதியாகவும் இருக்கிறது என்றும் அதன் பின்பங்களே பிரபஞ்சங்கள் அனைத்தும் என்று உணர்ந்து எல்லோருடமும் அன்பு செலுத்தி வாழ்வதாகும். இறைமையை ஒவ்வொரு உயிரினும் காணபதாக அமைகிறது ஆன்மீகம் என்பது அதிசயத்தை தாண்டியது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
வணக்கம் ,
என்னுடைய ஜாதகம் உங்கள் blog இல் கணித்து போடவும்.
date-10/09/1983
time 11.20 pm
place -vellore
நன்றி
வணக்கம் சார். எதற்கு பலனை பொதுவில் போடவேண்டும். நான் தரும் ஜாதகங்களை பல வருடங்களுக்க முற்பட்டவை. உங்களுக்கு மெயிலில் பலனை தருகிறேன்.
ok nandri
Post a Comment