வணக்கம் நண்பர்களே!
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல்(Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் 2008 ஆய்வில், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது ஒரு தொடர்பை பயன்படுத்தி பொது அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில் முதல் கை அனுபவம் பெற்றுள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 ல் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளுள் 95 வது இடத்தில் இந்தியா இருந்தது.
இந்திய அரசாங்கம் இயற்றிய சில சமூக செலவு திட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் திட்டங்கள் ஊழலுக்கான மிக பெரிய மூலங்கள் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார திட்டம் ஆகியவை உதாரணங்கள் ஆகும். நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஒழுங்குமுறை மற்றும் போலீஸ் நிறுத்தங்களுக்கு, போக்குவரத்து சார்ந்த தொழில்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன. எனினும் சுவிஸ் அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுக்களை ஒரு முழுமையான கட்டுருவாக்கம் மற்றும் தவறானது என்று கூறுகிறார்கள்.
அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள், பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம் மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை, வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களில் அடங்கும்.
நன்றி
wikipedia
மேலே உள்ள செய்திளைப்பற்றி எதார்த்தமாக பார்க்க நேரிட்டது சரி நமது எண்ணத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன்.
அரசாங்கத்தில் வேலைக்கு சேர்க்கும்பொழுது நல்ல சோதிடரை வைத்து அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டு சேர்த்தால் இந்த மாதிரி ஊழல் வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது. நீங்களே பாருங்கள் காவல்துறைக்கு ஆளை எடுக்கிறார்கள். அவர்களை பார்த்தால் போலீஸ் மாதிரியாகவா தெரிகிறது. போலீஸ் என்றால் நல்ல உயரமாக எடுப்பாக இருப்பார்கள். அனைவரும் செவ்வாயின் காரத்துவத்தோடு இருப்பார்கள். இப்பொழுது உள்ளவர்களை பார்த்தால் அனைவரும் குள்ளமாக இருக்கிறார்கள். சனியின் அம்சத்தில் இருக்கிறார்கள். திருடனே போலீஸ் ஆக இருந்தால் திருடனை எங்கு போய் பிடிப்பது. திருடனே அவன் தானே. அனைத்திலும் வில்லகத்தை கலந்துவிட்டார்கள் அதனால் தான் ஊழல் உருவாகிறது.
சோதிடர்களுக்கே நாங்கள் லஞ்சம் கொடுத்து சேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா அப்படி நடந்தால் இந்தியாவின் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாது. சோதிடம் மூலம் நல்லவரை தேர்ந்தெடுக்கமுடியும் என்பதால் இதனை சொன்னேன். நம்ம ஆளுங்க பிறந்த தேதியை மாற்றிக்கொடுப்பார்கள் தான். நல்ல சோதிடர்களுக்கு சோதிடத்தை பார்க்காமலேயே ஆளை பற்றி கணக்கு செய்துவிடமுடியும்.
ஒவ்வொரு கிரகத்தின் அம்சத்தை சம்பந்தப்பட்ட கிரகம் ஒவ்வொரு மனிதனிடத்தில் வெளிப்படுத்தும் அதனை நாம் பார்க்கும்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகத்தின் அம்சத்தை சம்பந்தப்பட்ட கிரகம் ஒவ்வொரு மனிதனிடத்தில் வெளிப்படுத்தும் அதனை நாம் பார்க்கும்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம்.
சும்மா ஜாலிக்காக இந்த பதிவை எழுதினேன். இதனை சாத்தியப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால். செய்தால் நாடு நன்றாக இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment