Followers

Monday, July 22, 2013

அம்மனின் பூஜை விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நமது அம்மனின் பூஜையை பற்றி நேற்று பதிவில் சொல்லிருந்தேன். அதற்கு வரவேற்பு பல பேர்களிடம் இருந்து வந்தது. இவர்கள் நமது அம்மனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 

பல பேர் நமது அம்மனின் அருளால் நல்லதை பெற்று இருக்கிறார்கள். பல பேர் குடும்பத்தில் இருக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நான் சொன்னவுடன் அவர்களிடம் இருக்கும் பணத்தை அனுப்ப நினைக்கிறார்கள். உங்களுக்கு சொல்லிக்கொள்ளுவது என்ன என்றால் உங்களிடம் அதிகமான பணம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே பூஜைக்கு என்று பணம் அனுப்பவேண்டும். நடுத்தரகுடும்பத்தில் இருந்துக்கொண்டு பணத்தை அனுப்பி உங்களின் மாத செலவுக்கு பிரச்சினை ஏற்படும். இப்படிபட்டவர்கள் தயவு செய்து பணத்தை அனுப்பாதீர்கள். 

உங்களின் துயர்துடைக்க மட்டுமே அம்மன் உங்களுக்கு உதவுகிறது. அந்த நினைப்பை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையில் இருந்து விடுவித்துவிட்டாய் அடுத்து என்னை பொருளாதாரத்திலும் உயர்த்து என்று நீங்கள் வேண்டுதலை வையுங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் உயரமுடியும். கண்டிப்பாக அம்மனுக்கு நீங்கள் செய்யவேண்டிய கட்டாயம் ஒன்றும் கி்டையாது. உங்களை காப்பாற்ற அம்மன் இருக்கிறது.

நமது அம்மனை நான் ஒரு தாய் போல் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன். நீங்களும் அவ்வாறே எண்ணவேண்டும். ஒரு தாய் தன் மக்களை காப்பாற்றும். அதற்கு நாம் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நன்றாக இருக்கும்பொழுது செய்யலாம்.

நல்ல நிலைமையில் அதாவது பொருளாதாரத்தில் நீங்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அம்மனுக்கு செய்யலாம். பிராத்தனையை வையுங்கள். நான் அதனை செய்கிறேன் இதனை செய்கிறேன் என்று நினைக்காமல் இந்த பிரச்சினையை எனக்கு தீர்த்து வை என்று மட்டும் பிராத்தனை இருக்கட்டும்.எளிதில் பிரச்சினை தீர்ந்துவிடும். ஏழைக்கு இறங்கி வந்து தீர்த்து வைக்கும் தாய் அவள் என்பதை மறக்க வேண்டாம்.

பூஜை செய்வதின் நோக்கம் அந்த அம்மனின் சக்தியை அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செய்கிறேன். மாதத்திற்க்கு ஒரு பூஜை செய்து அதனை பலபேர்களின் இன்னல்களை தீர்க்க வழிசெய்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: