Followers

Monday, July 8, 2013

பூர்வ புண்ணியம் 53


வணக்கம் நண்பர்களே !
                     பூர்வ புண்ணியத்தைப்பற்றி எழுதி நீண்ட நாட்களாகவிட்டது. பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏன் நிறுத்திவிட்டீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று சொன்னார்கள். நானும் எழுதிகிறேன் என்று சொல்லிவந்தேன் ஆனால் எழுவதற்க்கு நான் தயாராகவில்லை. அதற்கு காரணம் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடையவர்களை யாராவது ஒருவராவது கண்டுபிடிப்பார்கள் அதன் பிறகு என்னை தொடர்புக்கொண்டு சொல்வார்கள் என்று பொறுத்து இருந்தேன். 

அதைப்போல் பல நண்பர்கள் அவர்களுக்கு நடந்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார்கள். எனக்கு அது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. நான் இந்த பூமியில் பிறந்ததன் அர்த்தம் அப்பொழுது தான் எனக்கே புரிந்தது. அப்பாடா ராஜேஷ் நீ ஜெயித்தாய் டா என்று என்னுடைய மனது கேட்டது.

பூர்வபுண்ணியத்தொடர் என்னுடைய சொந்த கருத்தில் இருந்து தான் உங்களுக்கு தந்தேன். என்னை கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்ற நண்பர் என்னை கடந்த மாதம் ஊருக்கு செல்லும்பொழுது சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் சொல்லிருந்தார் என்னுடைய பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபரை நான் சந்தித்தேன் என்றார். பிறது சொன்னார் கேதுவிற்க்கு அனைவரும் விநாயகரை தான் வழிபட சொல்வார்கள் ஆனால் நீங்கள் ஐயப்பனையும் வழிபடுங்கள் என்று சொல்லியுள்ளீர்கள் அதனை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார். நான் எங்கே கண்டுபிடித்தேன் அனைத்தும் அம்மனின் செயல் என்று சொன்னேன்.

அந்த நண்பர் அவருடைய பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்டவரை சந்திக்கும்பொழுது அவரை பார்த்து கேட்டுள்ளார். விநாயகர் வணங்குவதோடு மற்ற எந்த கடவுளை வணங்குவீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் சொல்லியுள்ளார் நான் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.நான் சொன்ன காயங்கள் தான் அவருக்கும் இப்பொழுது ஏற்பட்டு இருக்கிறது

இதைப்போல் பல அனுபவங்களை நான் இப்பொழுது கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் கண்டிப்பாக இதனை நீங்கள் அனுபவிக்க முடியும். ஒரு ஆன்மீகவாதிகாக இருந்து இதனை தேடினால் இது சாத்தியப்படும்.பூர்வபுண்ணிய தொடர்பை அறிவது எளிமையான ஒன்று மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: