Followers

Friday, July 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 102


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஆன்மீகவாதியின் முக்கிய செயல் ஒன்றைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

காலையில் எழுந்தவுடன் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கும். இதனை குரு எனக்கு கற்றுக்கொடுத்தார். எப்படி என்றால் எல்லோரும் வேண்டுவார்கள். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்வார்கள். இது அனைத்து மதத்திலும் உண்டு. ஆனால் கொஞ்சம் வித்தியாசத்துடன் சம்பந்தப்பட்ட நபருக்காக இந்த செயலை காலையில் பூஜையில் செய்யவேண்டும்.

காலையில் நான் எழுந்தவுடன் இன்று ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்று எழுவதால் எழும்பொழுதே ஒரு பெரிய புண்ணிய செயலை செய்ய ஆண்டவன் நம்மை எழுப்புகிறான் என்று நினைக்கும்பொழுது என்னை படைத்த இறைவனுக்க எப்படி நன்றி சொல்லுவது என்பதை தெரியவில்லை. இரவில் படுக்கும்பொழுது ஒன்று இரவில் கனவில் ஒரு உயிர் பிரச்சினையில் இருக்கிறது என்று காட்டும் அல்லது காலையில் பூஜையில் அமரும்பொழுது ஒரு உயிர் பிரச்சினையில் இருக்கிறது என்பது தெரியவரும் அதனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி அதனை செய்த பிறகு தான் பூஜையை விட்டு எழும்பமுடியும்.

ஒரு உயிர் என்று சொன்னேன் அல்லவா அந்த உயிர் எந்த மனிதனுடையது என்பது எங்களுக்கு தெரியாது. யாரோ ஒருவராக இருக்கலாம் அல்லது அடுத்த வீட்டில் உள்ளவர்களாகவோ இருக்கலாம்.அந்த மனிதன் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் கண்டிப்பாக செய்யவேண்டும்.ஒரு மனிதன் தனக்காக தூக்கத்தை விட்டு எழும்புவதற்க்கும் அடுத்தவர்களுக்காக தூக்கத்தை விட்டு எழும்புவதற்க்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது.

ஒரு சில நாட்களில் இந்த புண்ணியத்தை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்காது. இந்த செயலை செய்ய செய்ய ஆன்மீகத்தில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லலாம். இதனை குரு எனக்கு சொல்லி்க்கொடுத்த விசயங்களில் அதிமுக்கியமானது இது தான். என்னால் பல உயிர்கள் காப்பாற்றபடுகிறது என்பதை நாம் நினைத்தால் அந்த புண்ணியத்திற்க்கு வேறு ஏதும் இல்லை. 

இதனை அனைத்து ஆன்மீகவாதிகளும் செய்வார்கள். வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இதனை ஏன் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என்றால் நீங்களும் இந்த செயலை செய்யவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே. பல சேவைகள் இருக்கின்றன். ஒரு முக்கியமான செய்தி ஒன்றை சொல்லுகிறேன். இன்றைய காலகட்டங்களில் ஆன்மீகவாதிகளை எதிர்ப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். 

இப்படி ஆன்மீகவாதிகளை எதிர்ப்பவர்களுக்கு பல குடும்பங்களை ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும். இவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பார்கள் அந்த ஆன்மீகவாதி பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்று நினைக்கலாம். உண்மையில் யாரும் இதனை எல்லாம் செய்யமாட்டார்கள். ஒரு ஆன்மீகவாதி செய்யும் புண்ணியம் அவனை எதிர்பபவர்களை அழிக்கும்.

புண்ணியம் என்பது இது தான் அடுத்த உயிரை காப்பாற்ற ஒரு நாளைக்கு பல பணிகளை செய்வார்கள். காலையில் எழுந்தவுடனே ஒரு உயிரை காப்பாற்றுபவன் எந்த சொல் சொன்னாலும் பலிக்கும்.




கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

வரும் 28/07/2013 ஞாயிறு மற்றும் 29/07/2013 திங்கள்  கிழமைகளில் என்னை இந்த ஊரில் சந்திக்கலாம். என்னை உடனே தொடர்புக்கொண்டுவிடுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: