வணக்கம் நண்பர்களே !
நமது அம்மனின் கோவிலில் அன்னதானமும் செய்யப்படும் என்று பதிவில் சொல்லிருந்தேன். அன்னதானமும் தயார் செய்து இருந்தேன். அந்த கோவில் இருக்கும் எங்களின் ஊரில் யாரும் வரவில்லை. என்ன செய்து அடுத்தமுறையில் இருந்து அன்னதானத்தை குறைத்து கொண்டு பூஜைக்கு என்று அதிக செலவு செய்யலாம் என்று இருக்கிறேன்.
அன்னதானம் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு தான் செய்யப்படவேண்டும். வறுமையில் இருக்கும் மக்களுக்கு செய்யப்படும்பொழுது இறைவன் மகிழ்வான். பொதுவாக அன்னதானம் எந்த நோக்கத்திற்க்கும் செய்யப்படகூடாது என்பார்கள். அன்னதானம் செய்யவேண்டும் அதில் பலனை எதிர்நோக்ககூடாது என்பார்கள். நமது சாஸ்திரமும் அப்படி தான் சொல்லுகிறது. தினமும் உங்களால் முடிந்தளவுக்கு அன்னதானம் செய்யலாம். உங்களின் வீடுகளிலேயே தயார் செய்யப்பட்டு தான் அன்னதானம் செய்யப்படவேண்டும் என்ற கட்டுபாடு கிடையாது.
உணவங்களில் இருந்துகூட வாங்கிக்கொடுக்கலாம். உங்களின் வசதிக்கு தகுந்தவாறு செய்யலாம். இப்பொழுது நகரங்களில் அம்மா உணவகம் வந்துள்ளது அதில் கூட நீங்கள் வாங்கிக்கொடுக்கலாம். ஏன் இதில் வாங்கிக்கொடுங்கல் என்று சொல்லுகிறேன் என்றால் மிககுறைந்த அளவு நாம் சம்பாதிக்கும்பொழுது கூட நாம் அன்னதானம் செய்யமுடியும் என்ற காரணத்தால் இதனை சொல்லுகிறேன்.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலையில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் என்ன செய்யலாம என்றால் மதியம் சாப்பிடும்பொழுது உங்களுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேளை உணவை வாங்கிக்கொடுக்கலாம். அவர்கள் நண்பர்களாக இருந்தால் கூட பரவாயில்லை இதனை செய்யுங்கள். என்ன இவர் இப்படி சொல்லுகிறார்கள் ஏழைக்கு தானே அன்னதானம் செய்யப்படவேண்டும் என்று நினைக்கலாம். ஏழைக்கு அன்னதானம் செய்வது சரியான ஒன்று தான் அதிக வேலை காரணமாக வெளியில் செல்வதற்க்கு நேரம் இல்லாதபொழுது இப்படி செய்யலாம் அடுத்தவர்களின் வயிறு வாழ்த்தும் அந்த வாழ்த்துகளை நீங்கள் பெறவேண்டும் என்ற காரணத்தால் சொல்லுகிறேன்.
கலியுகத்தில் அன்னத்திற்க்கு கஷ்டப்படுவார்கள் என்று தான் அன்னதானம் மட்டுமே மிகப்பெரிய தானமாக வைத்துள்ளார்கள். திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தில் பார்த்தீர்கள் என்றால் எல்லா இடங்களிலும் அன்னதானம் நடைபெறும். சாதாரண நாட்களில் அங்கு இருக்கும் சாதுக்களுக்கு ஒரு ஆள்கள் கூட அன்னதானம் செய்யமாட்டார்கள். விழாநாட்களில் அன்னதானம் போடுவது சிறப்பு தான் அதே நேரத்தில் சாதாரண நாட்களிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.
இன்று ஒருவருக்கு உங்களால் உணவு தரப்பட்டது என்றால் அந்த செயல் எப்பேர்பட்ட புண்ணியம். புண்ணியத்தை பெறுவதற்க்கு இன்றைய காலகட்டததில் மிக எளிதான ஒரு செயல் அன்னதானம் மட்டுமே.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment