Followers

Sunday, July 14, 2013

மாந்தி


வணக்கம் நண்பர்களே!
                     மாந்தியைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். சனியின் மைந்தன் என்று அழைக்கப்படும் கிரகம் மாந்தி. இது கெடுதலை தரும் கிரகம் என்பதால் மறைந்த வீட்டில் அமரும் போது நல்ல பலனை தரும் என்று சொல்லுவார்கள். மற்றைய கிரகங்களுக்கு போல் இதற்கு என்று தசா புத்தி கிடையாது. 

மாந்தியை கேரளாவில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் அதற்கு காரணம் ஏன் என்று பழைய பதிவுகளில் சொல்லியுள்ளேன். மாந்தியைப்பற்றி தெரிந்த சோதிடனுக்கு பரிகாரம் செய்ய நல்ல திறமை இருக்கும். கேரளாவில் கூட மாந்தியை வைத்து பரிகாரம் செய்து வெற்றி அடைவார்கள். ஆவி உலகத்திற்க்கு காரகம் வகிப்பதால் ஆத்மாக்கள் வகிக்கும் இடத்தின் அதிபதியை வைத்து பரிகாரம் செய்வார்கள்.

மாந்தியை வைத்து பரிகாரம் செய்வது என்று சொல்லுவார்கள் ஆனால் பரிகாரம் மாந்திக்கு கிடையாது. மாந்தியின் வசம் உள்ள ஆத்மாக்களுக்கு பரிகாரம் செய்வார்கள். நமது முன்னோர்களின் ஆத்மாவிற்க்கு பரிகாரம் செய்யும்பொழுது நமது முன்னோர்கள் வழியாக நமக்கு பாக்கியம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட செயல் வெற்றி அடையும்.

தமிழ்நாட்டு சோதிடர்கள் பரிகாரத்தை அதிகம் செய்வதில்லை கேரளாவில் சோதிடர்கள் பரிகாரம் செய்வார்கள். பரிகாரத்திற்க்கு பெயர் பெற்றவர்கள் என்றால் கேரளாவில் உள்ளவர்கள். அதற்க்கு காரணம் மாந்தியை வைத்து அவர்கள் பரிகாரம் செய்வதால் மட்டுமே.

நம்மிடம் சோதிடம் பார்க்க ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எதற்க்கோ ஆசைபடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இது தேவை என்று கேட்கிறார். எனக்கு எப்படியாவது நடத்திக்கொடுங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு நாம் என்ன சொல்லுவோம் உன்னுடைய ஜாதகத்தில் அதற்கு வழி இல்லை என்று சொல்லிவிடுவோம். கேரளா சோதிடர்களாக இருந்தால் என்ன செய்வார்கள் உனக்கு பரிகாரம் செய்து அதனை பெற்று தருகிறேன் என்று சொல்லுவார்கள்.

பரிகாரத்தையும் செய்துவிடுவார்கள். எப்படி என்றால் நமது அப்பா அல்லது தாத்தா அதற்கு முன்னால் உள்ளவர்களின் பூர்வபுண்ணியம் எதும் இருக்கும் அதனை பெற்று இவனுக்கு செய்து தருவார்கள். அதற்கு காரகம் வகிப்பவர் மாந்தி.

நீங்கள் சோதிடதொழில் செய்பவர்களாக இருந்தால் இதனை கற்பது அவசியம். ஏன் என்றால் சோதிடத்தை வைத்து கணி்த்து பலனை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால் இந்த ஜென்மத்தில் நீங்கள் சம்பாதிக்க முடியாது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: