Followers

Sunday, July 14, 2013

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு ஆன்மீகசாதனை செய்பவர்களும் தங்களின் சுயமுயற்சியால் மட்டுமே அந்த சாதனையை செய்யவேண்டும். குரு ஒரு படியை மட்டும் தான் காட்டிக்கொடுப்பார் மீதி படியை நீங்கள் தான் ஏறவேண்டும். ஒரு சதவீத உழைப்பு மட்டுமே குருவிடம் உள்ளது மீதி உள்ள சதவீதத்தை நீங்கள் எட்டி பிடித்துக்கொண்டு செல்லவேண்டும்.

உழைப்பு உங்களுடையது மட்டுமே. உங்களின் உழைப்பை போட்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும். காயத்ரி உபாசனை எல்லாம் கடுமையாக உழைத்து எடுக்கவேண்டிய ஒரு விசயம். காயத்ரி மந்திர உபாசனை செய்பவர்கள் அவர்களுக்கு என்று ஒரு வரைமுறையை கொடுத்து இருக்கிறேன். அதனை அவர்கள் சரிவர பயன்படுத்திக்கொண்டு வரவேண்டும். அப்படி இல்லை என்றால் காயத்ரி மந்திரம் உங்களுக்கு உரு ஏறாது. அதனை விட்டுவிட்டு சார் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது அதற்க்கு மாற்றுவழி சொல்லுங்கள் என்று என்னை தேடிவந்தால் கண்டிப்பாக நீங்கள் ஆன்மீக சாதனை செய்ய தகுதிஅற்றவர் என்று தான் நினைக்க தோன்றுகிறது. எதனையும் நீங்களாகவே சரிசெய்து கற்றுக்கொள்ள உங்களுக்கு துணிவு இருக்க வேண்டும்.

சோதிடமும் இப்படி தான் ஒரு கருத்தை சொல்லமுடியும் அதனை வைத்து நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். தசாவைப்பற்றி எழுதும் போது கூட ஒரு சில நண்பர்கள் சொன்னார்கள் எல்லாவற்றையும் தந்தால் மட்டுமே நீங்கள் சோதிடர் என்று ஏற்றுக்கொள்ளவும் என்றார்கள். இவர்கள் ஏற்றுக்கொண்டால் தான் நான் சோதிடன் என்று சொல்லிக்கொண்டு தொழிலை நடத்தமுடியும் என்பதுபோல் அந்த கேள்வி இருந்தது. சோதிடத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அவன் சொல்லுவது நடந்தால் அவனை தேடி மக்கள் செல்லபோகிறார்கள. 

சோதிடத்தில் அனைத்தையும் கற்றவன் யாரும் இல்லை எல்லாவற்றையும் தருகின்ற சோதிடர்கள் பாட்ம் நடுத்துவார்கள் அவர்களிடம் போய் கற்றுக்கொள்ளுங்கள். தேவையற்ற கருத்தை எழுதி எனக்கு அனுப்புவதை விட்டுவிட்டு முடிந்தால் மக்களுக்கு நல்லதை செய்ய என்ன வழி என்று பாருங்கள்.

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கும் சொல்லுவது இது ஒன்று மட்டுமே ஏனோ தானோ என்று செய்யாமல் இது ஒன்று மடடுமே வழி என்று நினைத்துக்கொண்டு செயலில் இறங்குங்கள். உங்களின் கவனம் அதில் மட்டுமே இருந்தால் மட்டுமே உங்களுக்கு சித்தி கிடைக்கும். நடப்பது கலியுகம். அதிக முயற்சியால் மட்டுமே வெற்றி பெறலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: