வணக்கம் நண்பர்களே!
சினிமா அனுபவத்தைப் பற்றி சொல்லிருந்தேன். அதனை நிறைவு செய்யவில்லை. தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம். இப்பொழுது எல்லாம் தியேட்டரில் கூட்டம் வருவதில்லை. அதற்கு என்ன செய்கிறார்கள் என்றால் மால்களில் தியேட்டரை அமைத்துவிடுகிறார்கள். பாசி மணி எல்லாத்தையும் போட்டு ரோட்டு ஒரத்தில் விற்றுக்கொண்டிருந்ததை பெரிய கட்டத்தில் ஏசி போட்டு அதற்குள் விற்றால் அது மால். எல்லாம் சுக்கிரன் காரகம் வகிக்கும் தொழில்.
சினிமாவும் சுக்கிரன் காரகம் வகிக்கும் தொழில் என்பதால் சுக்கிரன் காரகம் வகிக்கும் தொழில் நடைபெறும் இடத்தில் சினிமாவை வைத்து தொழில் செய்கிறார்கள். சென்னையில் இருந்தால் நீங்கள் வடபழனி பக்கம் சென்று பார்த்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும் பல பேர் பைத்தியம் மாதிரி சுற்றிக்கொண்டுருப்பார்கள். எல்லாம் சினிமா பைத்தியங்கள். எப்படியும் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் சாதித்து இருக்கலாம். முக்கால்வாசி பேர் வாழ்க்கையை இதில் தொலைத்து இருப்பார்கள் இதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் கெடுவதால் வருவது.
சினிமா அனுபவம் எழுதியதற்க்கு காரணம் ஒன்று இருக்கிறது அது என்ன என்பதை இப்பொழுது சொல்லிவிடுகிறேன். என்னிடம் பேசும் சில நண்பர்கள் சார் நான் பயங்கரமான தெய்வ பக்தியுள்ள ஆள். எனக்கு எப்பொழுது எல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்பொழுது நான் கோவிலே கதி என்று இருப்பவன் சார் என்று சொல்லுவார்கள். இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு பரிதாபமாக இருக்கும் இவர்களை பார்த்து அல்ல இவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களின் நிலையை எண்ணி. என்ன நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் என்று நினைக்க தோன்றும்.
உண்மை தான். நீங்கள் எப்பொழுது திருமண பந்தத்தில் இணைந்துவிட்டீர்களோ அப்பொழுதே நீங்கள் ஒருவர் அல்ல. நீங்கள் கோவிலுக்கு சென்றாலும் உங்களின் மனைவியை அங்கு கூப்பிட்டு சென்றால் மட்டுமே உங்களுக்கு அந்த கடவுள் அருளை தரும். கோவிலுக்கு மட்டும் கூப்பி்ட்டுக்கொண்டு செல்லகூடாது. நேரம் கிடைக்கும்பொழுது சினிமா மற்றும் பொழுதுபோக்கு தரும் இடங்களுக்கு அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்.
என்னுடைய குருநாதர் என்னிடம் சொல்லுவார். ஒரு மனிதன் இல்லறத்தில் இருந்தால் அவன் அவனுடைய மனைவியை எந்தளவுக்கு சந்தோஷப்படுத்தி நல்லபடியாக வைத்திருக்கிறானோ அப்பொழுது மட்டுமே அவனுக்கு மோட்சம் கிடைக்கும். இது தான் அவனுக்கு உள்ள கடமை என்பார். நம்ம ஆளுங்க என்ன செய்வார்கள் திருமணத்தை செய்வது அப்படியே ஆண்டி மாதிரி கோவிலே கதி என்று கிடப்பது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள். உங்களுக்கு அருள் என்பது உங்களின் மனைவியை எப்படி வைத்துக்கொள்கிறீர்களோ அதன் மூலமாக தான் வரும்.
எப்பொழுது திருமணம் செய்கிறீர்களோ அப்பொழுதே நீங்கள் இவளையும் சேர்த்துக்கொண்டு நான் உன்னை சரணடைவேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு செயல்படவேண்டும். என்னி்டம் எனது குரு சொல்லுவார் நல்ல சந்தோஷமாக இரு என்பார். அதனையே உங்களிடமும் சொல்லுகிறேன் நல்ல சந்தோஷத்தோடு ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவியுங்கள். என்ன புரிகிறதா நண்பர்களே.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment