வணக்கம் நண்பர்களே!
பல ஏழை மக்களை பார்க்கும்பொழுது ஒரு விசயம் எனக்கு தென்பட்டது அது என்ன என்றால் நாங்கள் ஏழை என்று அவர்களே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இந்த ஏற்றுக்கொள்ளும் விதம் மட்டுமே அவர்களே ஏழையாகவே வைத்திருக்கிறது.
ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொளளகூடாது. அதாவது எல்லாவிதத்திலும் அதனை ஏற்றுக்கொள்ளகூடாது. அதுவும் வறுமையில் மட்டும் இந்த மனப்பக்குவத்தை ஏற்றுக்கொள்ளகூடாது.நான ஏழை என்று மட்டும் ஒருவன் ஏற்றுக்கொண்டுவிட்டால் அவனால் வாழ்க்கையில் என்றுமே முன்னேற்றம் என்பதை அடையமுடியாது.
இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் ஒரு நாளும் நான் ஏழையாகவே இருப்பேன் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளகூடாது. இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படியாவது முன்னேற்றம் அடைந்தே தீருவேன் என்று உறுதியோடு இருந்தால் மட்டுமே அவனால் வெற்றி பெறமுடியும்.மனதில் எந்த நேரத்திலும் வெற்றி பெறுவேன் என்று உறுதியோடு செயல்படும்பொழுது மட்டுமே வெற்றி கிடைக்கும்.
வறுமை போல் மரணத்தையும் இவர்கள் விரும்பி வரவழைக்கிறார்கள் என்பதையும் கண்டேன். நான் இனிமேல் வாழ்ந்து என்ன செய்யபோகிறேன். நான் சாகபோகிறேன் என்று அவர்களாகவே மரணத்தை வரவழைக்கிறார்கள். எப்பொழுது மனதில் மரணத்தை கூப்பிடுகிறார்களோ அப்பொழுதே மரணம் தேடி வந்துவிடும்.
மனதிற்க்கு மரணத்தைப்பற்றி சிந்தனை வரக்கூடாது. மரணத்தைப்பற்றி சிந்தனை எப்பொழுது வரலாம் என்றால் அவன் ஆன்மீகத்திற்க்கு வரும்பொழுது மட்டுமே அவன் நினைக்கவேண்டும். இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு இதனைப்பற்றி நினைக்ககூடாது. ஏன் என்றால் உங்களுக்கு கடமை நிறைய இருக்கிறது.
மரணம் வரப்போகிறது என்று மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணி பார்த்தால் உங்களின் மனது உடனே மரணத்தை தழுவ ஆயத்தம் ஆகிவிடும். உடல் எல்லாம் ஒரு மாதிரி செய்ய ஆரம்பித்துவிடும். உடனே மரணம் வந்துவிடும். தற்கொலை செய்தவற்க்கு நீங்கள் பிறஉபகரணங்களை நாட வேண்டியதில்லை. உங்களின் மனதே போதும் அதுவாகவே கொன்றுக்கொள்ளும்.
இந்த நாட்டில் மற்றும் எல்லா நாட்டிலும் வறுமை மற்றும் மரணத்தை பல பேர் அவர்களாகவே வரவழைத்துக்கொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இதனை மேலோட்டமாக படித்தால் ஒன்றும் புரியாது. படித்துவிட்டு சிந்தனை செய்யும்பொழுது எளிதில் உங்களுக்கு புரியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment