வணக்கம்!
முன்னோர்கள் வழிபாட்டைப்பற்றி சொல்லிருந்தேன். கிராமபுறங்களில் பட்டவன் என்று ஒரு தெய்வ வழிபாட்டை செய்வார்கள். கிராம் கோவில்களில் இந்த பட்டவன் தெய்வத்திற்க்கு என்று ஒரு இடம் ஒதுக்கி வழிபாட்டை செய்துவருவார்கள்.
பட்டவன் என்று இருக்கும் கோவில் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முன்னோர்கள் வழிபாடு தான். இளம் வயதில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் நல்ல பலசாலியாக இருந்து இறந்து போயிருப்பார். அவரை பட்டவன் என்று சொல்லி வழிபாடு நடத்துவார்கள்.
பட்டவன் என்று சொன்னாலே பெரும்பாலும் முன்னோர்கள் இறந்ததை வைத்து தான் வழிபாடு நடத்தப்படும். பெரிய வீரனாக இருந்தவர் இறந்தால் அவரை பட்டவனாக வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இதன் செயல்பாடும் வீரதனமாக தான் இருக்கின்றது.
எனக்கு தெரிந்த அறிவை வைத்து இதனை சொல்லுகிறேன். நீங்களும் பட்டவன் வழிபாடு செய்யலாம். பட்டவனை பற்றி தெரிந்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment