வணக்கம்
காலையில் அனுபவம் என்ற ஒரு பதிவில் பார்த்த கருத்தைப்பற்றி தான் இந்த பதிவு. நமது முன்னோர்களை வழிபடுவது ஒரு கடமையாகவே நமது வழக்கத்தில் வைத்திருப்பார்கள்.
நமது மதத்தில் கூட புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடுவது மற்றும் அவர்களுக்கு புண்ணிய நதிகளில் பூஜை செய்வது எல்லாம் முதன்மையாகவே வைத்திருப்பார்கள்.
நமது முன்னோர்கள் அனைவரும் மிக மிக நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் ஆசி நமக்கு கிடைத்தால் நமது வாழ்வு நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள்.
இன்றைய காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் நல்லவர் என கண்டுபிடிப்பதே அவ்வளவு அரிது. அவர்களுக்கு பெரிய அளவில் கோவில் கட்டி வழிபாடு நடத்துவது எல்லாம் ஒரு அந்தஸ்தை காட்டுவது போலதானே தவிர அதில் ஒன்றும் மக்களுக்கு கிடைக்காது.
உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் கோவில் கட்டி நீங்கள் மட்டும் வழிபட்டால் நல்லது. அடுத்தவர்களை வழிபட சொன்னால் அதுதான் பிரச்சினை. உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு மட்டுமே வழிகாட்டுவார்கள் அடுத்தவர்களுக்கு அல்ல.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment