Followers

Wednesday, July 1, 2015

சனி தசா பலன்கள்


வணக்கம்!
          சிம்மத்தில் ஒருவருக்கு சனி இருந்து தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்று பொதுவான பலனை தருகிறேன்.

சிம்மத்தில் சனி இருந்து தசாவை நடத்தும்பொழுது நீங்கள் வேலை செய்துக்கொண்டிருந்தால் அந்த வேலையை நீங்கள் ஒழுங்காக செய்யமுடியாது. வேலை செய்துக்கொண்டிருக்கும் கம்பெனியில் இருந்து உங்களுக்கு சம்பளம் தரமாட்டார்கள். வேலை பார்க்கும் இடத்திற்க்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

அரசாங்க வேலையில் இழுத்தடிப்பு நடக்கும். அரசாங்க வேலையை பார்த்தாலே நீங்களே ஒதுங்கிவிடுவீர்கள். அரசாங்கத்தை குறைச்சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். அதிகமான கர்வம் உங்களுக்கு இந்த தசா முழுவதும் ஏற்படும்.

தசா பாதி காலம் முடியும் வரை உங்களுக்கும் உங்களின் தந்தைக்கும் உறவு நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு தசாவின் பாதியில் இருந்து தந்தைக்கும் உங்களுக்கும் உறவு நன்றாக இருக்காது. அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இது அமைகிறது.

ஒரு சில ஜாதகங்களில் சிம்மத்தில் சனி தன் தசாவை நடத்தும்பொழுது அதிகபடியான நன்மையும் செய்து இருக்கிறது. சிம்மம் பகை வீடு என்பதால் கெடுதல் மட்டும் செய்யும் என்று சொல்லமுடியாது. ஒரு சில ஜாதங்களில் நல்ல பலனை கொடுத்து இருக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: