வணக்கம்!
கன்னி ராசியில் சனி இருந்த தன் தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். புதனின் வீட்டில் சனி அமர்வதால் தசா முழுவதும் நண்பர்களின் வழியில் நல்ல உதவியை எதிர்பார்க்கலாம். நேரிடையான வியாபாரம் செய்வதை விட கமிஷன் ஏஜென்ட் தொழிலை அதிகம் கொடுக்கும்.
பெரிய தொழிலை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுப்பார். பெரிய நிறுவனத்தின் தலைமை பதவி தேடி வரவைப்பார். அவ்வப்பொழுது நண்பர்களால் அந்த பதவியிலும் பிரச்சினை கொடுக்கும். குறுகிய காலத்தில் நினைத்ததை அடைய வைக்கும்.
மாமன் வகையில் இருப்பவர்கள் வழியாக உங்களுக்கு நல்லது நடக்கும். பெரும்பாலும் மாமன் சொல்லும் செயலை செய்ய வைக்கும். கிராம புறத்தில் உள்ள மாமன் வகையில் இருந்த பெரும்பாலும் உதவி வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
பெரும்பாலும் புதனின் வீட்டில் சனி இருப்பதால் ஆண்மை தன்மை குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம். புதன் அலிக்கிரகம் என்பதால் சனி அதில் இருந்து அதிகமாக அலித்தன்மையை ஏற்படுத்தும்.
தோல் நோய்கள் வரும். மருத்துவர்களிடம் சென்று மருத்தவர்களின் ஆலோசனையோடு தகுந்த பரிகாரத்தையும் எடுத்துக்கொள்வது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment