Followers

Wednesday, July 1, 2015

இயற்கையான முறையில் பூஜை


வணக்கம்!
          நாம் கடவுளை வணங்குவதற்க்கு பூஜை செய்கிறோம். அவர் அவர்களின் சக்திக்கு தகுந்தவாறு பூஜைக்கு என்று செலவு செய்து பூஜை செய்கிறோம். இந்த பூஜை இறைவன் எடுத்துக்கொண்டு நமக்கு நாம் கேட்பதை தருகிறார்.

பூஜை செய்யும்பொழுது நாம் வாசனை வருவதற்க்கு வாசனை பொருட்களை பூஜையில் பயன்படுத்துகிறோம். இதில் சாம்பிராணி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் இந்த காலத்தில் இயற்கையான முறையில் சாம்பிராணியை பாேடுவதில்லை மாறாக கம்யூட்டர் சாம்பிராணியை போடுகிறோம்.

காலத்திற்க்கு தகுந்தவாறு நாம் மாறினாலும் நமது பூஜையில் பயன்படுத்தப்பட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் நல்லது. தீ மூட்டி அந்த நெருப்பை எடுத்து அதில் நல்ல சாம்பிராணியை பயன்படுத்தினால் அதில் இருந்து வரும் நறுமணம் தெய்வத்திற்க்கு உகந்ததாக இருக்கும்.

நமது அம்மன் கோவிலில் இந்த முறையில் தான் சாம்பிராணி போடுவது உண்டு. இந்த நறுமணத்திற்க்கு தான் கடவுள் உடனே வருகிறார். நாம் கேட்பதை தருகிறார். கம்யூட்டர் சாம்பிராணி புகை தான் வருகிறது அதனை உபயோகப்படுத்த வேண்டாம். அலுப்பு பார்க்காமல் நீங்கள் செய்யும் பூஜையில் இயற்கையான முறையில் உள்ள சாம்பிராணியை பயன்படுத்துங்கள்.

ஒரு சிலர் தியானம் செய்வதற்க்கு முன் சாம்பிராணி வாசம் போடுவார்கள். அவர்களும் இந்த இந்த இயற்கையான முறையில் சாம்பிராணி போடும்பொழுது எளிதில் தியானம் கைகூடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Uoothupakthi parri sollunga.