வணக்கம்!
ஒவ்வொருவரையும் நான் சந்திக்கும்பொழுது அவர்களின் பழக்க வழக்கம் அனைத்தும் தெரியவரும் அதில் ஒன்றை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு சிலர் நிறைய வசதி வாய்ப்போடு இருப்பார்கள் ஆனால் அந்த நபர் தர்ம சிந்தனையோடு இருக்கமாட்டார்கள். தர்மசிந்தனையோடு இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில பிரச்சினை வந்துவிடுகிறது. செலவே செய்யாமல் இருப்பதால் அந்த பணத்தை செலவு செய்ய வைக்க அதுவே ஒரு ஏற்பாடு செய்து பிரச்சினையை கிளப்பிவிடுகிறது.
தர்ம சிந்தனை என்பது எந்த நேரமும் தர்மம் செய்யவேண்டும் என்பதில்லை. ஒரு இடத்தில் நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த இடத்தில் நீங்கள் டீ குடித்துக்கொண்டிக்கும்பொழுது ஒருவர் வந்து உங்களிடம் பிச்சை கேட்டால் அந்த நபருக்கு ஒரு டீயை உங்களால் வாங்கிக்கொடுக்கலாம்.
கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஆனால் அவரின் ஆத்மா அவரை அறியாமலேயே ஒரு நன்றியை நமக்கு தெரிவிக்கிறது. இந்த நன்றி உங்களை காப்பாற்றும்.
பிச்சை எடுக்கிறவர்களை பார்த்து இவன் போய் வேலை செய்யலாம் ஆனால் பிச்சை எடுக்கிறான் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அவனின் கர்மா அது அதனை நீங்கள் சொல்லி அவனின் கர்மாவை நீங்கள் வாங்கிக்கொள்ளாதீர்கள்.
தர்மம் செய்வது என்று சொல்லிக்கொண்டு ஆன்மீகத்தில் இருப்பார்கள். அதுவும் தவறு பொதுசேவை என்பது அரசாங்கம் செய்யவேண்டும் ஆன்மீகவாதிகள் கிடையாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
தர்மத்திற்கான விளக்கம் அருமை ஐயா!.ஆன்மிகவாதிகள் ஏன் தருமம் செய்ய கூடாது?
Post a Comment