Followers

Monday, January 11, 2016

குரு


க்ம்!
          ஒன்பதாவது வீடு தான் தன்னுடைய குரு யார் என்பதை காட்டும் இடம். ஒருவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வாெருவரும் குருவாக இருக்கின்றார்கள். இந்த இயற்கை ஏதாவது ஒன்றைச்சொல்லிக்கொண்டே இருக்கும் மனிதனுக்கு ஏதாவது பாடத்தை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும். மனிதன் இருக்கும் அவசரயுகத்தில் இதனை எல்லாம் கவனிக்க தவறிவிடுகிறான் அதற்கு ஒரு குரு இருந்தால் போதும் என்று மனிதனை நாடி செல்லுகிறான் அப்படிப்பட்ட மனிதனுக்கு தன்னுடைய குரு எப்படி அமைவார் என்பதை காட்டும் இடம் ஜாதகத்தில் ஒன்பதாவது வீடு.

சோதிடத்தை கண்டுபிடித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் பாருங்கள். ஒருவருக்கு ஒரு குரு அமைவது கூட அவரின் பாக்கியம் என்று எழுதிவைத்துவிட்டார்கள். நல்ல பாக்கியம் இருந்தால் நமக்கு நல்ல குரு கிடைப்பார்கள். பாக்கியம் இல்லை என்றால் குரு அமையமாட்டார்.

இன்றைய காலத்தில் அனைவரும் படிக்கிறார்கள் அனைவருக்கும் குரு இருந்து தான் கல்வியை கற்றுக்கொடுக்கிறார்கள். அனைவரும் டிகிரியை முடித்துவிடுகிறார்கள் அப்ப அனைவருக்கும் நல்ல குரு அமைந்திருக்கிறார் அல்லவா. அனைவருக்கும் நல்ல குருவாக அமைந்திருந்தால் அனைவருக்கும் பாக்கியமும் நல்ல அமைந்திருக்கவேண்டும். இன்றைய காலத்தில் ஒரு வகுப்பறையில் ஐம்பது பேர் படித்தார்கள் என்றால் முக்கால்வாசி பேர் உருப்படாமல் தான் போவார்கள். 

ஒரு வாத்தியார் நல்ல பாடம் நடத்தினால் கூட வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் புரிந்துவிடாது. ஒவ்வொருவரின் பாக்கியஸ்தானத்தை பொறுத்து அவர்களுக்கு புரியும். ஒரு சிலருக்கு நல்ல வாத்தியாரை கண்டால் கூட பிடிக்காமல் போய்விடும். அவன் அவன் ஜாதகத்தில் உள்ள பாக்கியஸ்தானத்தின் வேலை இதுவாக இருக்கும்.

ஒரு சிலரின் மனதில் நினைக்கதோன்றும் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள் அப்பொழுது குரு நடத்தியது நன்றாக தானே இருந்திருக்கும் அனைவருக்கும் பாக்கியம் நன்றாகதானே இருந்திருக்கிறது.

நம்ம ஆளுங்க நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் ஒரு சிலர் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். அதாவது அவன் அவன் தானாகவே படித்து வெற்றிபெற்றவனும் இருக்கிறான். இந்த நாட்டில் ஏதோ தேர்வு நடத்துகிறார்கள் ஏதோ தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர் என்று சொல்லவேண்டிய நிலை தான் உள்ளது.

பல சோதிட அன்பர்கள் சொல்லுவது உன்னுடைய பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் உனக்கு நல்ல குரு அமைவார் என்று சொல்லுவார்கள். அதாவது தவறு முழுவதும் ஜாதகனேயே சாரும் வேறு யாரும் பொறுப்பு கிடையாது என்பார்கள். உண்மையில் நல்ல பாக்கியம் அமைந்தவர்களுக்கும் நல்ல குரு அமைவதில்லை என்பது தான் உண்மை. 

பல குருவே இன்றைய காலத்தில் நல்ல நிலையில் இல்லை என்பது தான் உண்மையாகவே இருக்கின்றது. குரு என்றால் நீங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று மட்டும் கருதகூடாது அனைத்திற்க்கும் வழிகாட்டுபவன் தான் குரு. ஆன்மீகம் மட்டும் கிடையாது வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவனாக இருக்கவேண்டும்.

ஒரு குரு என்பவன் ஒருத்தனை மிக நல்ல முறையில் வழிகாட்டுபவனாக இருக்கவேண்டும். அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சிஷ்யனுக்கு விதையாக இறங்கி ஒரு மரமாக வளரவேண்டும். விதைப்பவன் நன்றாக விளைக்கவேண்டும் அந்த விதையை வாங்கி நல்ல மரமாக மாற்றுவது சிஷ்யனின் கடமை. இரண்டு பேரையும் சாரும் ஒரு விசயமாகவே இதனை நான் கருதுகிறேன். மேலும் பல கருத்துகளை நாம் இதில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: