Followers

Tuesday, January 12, 2016

குரு


ணக்கம்!
          நேற்று குருவைப்பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை தருகிறேன். அதாவது குருவை முதலில் நாம் பார்த்துவிடவேண்டும்.

குரு என்றவுடன் நாம் ஆன்மீகத்தை சொல்லிக்கொடுப்பவர் மட்டும் குரு என்று நினைத்துவிடுகிறோம். நமக்கு வாழ்வில் ஒவ்வொரு படியாக மேல்நோக்கி செல்வதற்க்கு சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொருவரும் குரு தான். ஏதாவது ஒரு வழியில் நமக்கு ஏதோ ஒரு நல்ல சேதியை கற்று தரும் வழியில் இயற்கை செயல்படுகிறது.

என்னுடைய தொடக்கபள்ளி ஆசிரியர்கள் இருவர் எனக்கு பல நன்மையான விசயத்தை சொல்லிக்கொடுத்தார்கள். அதாவது வாழ்க்கைக்கு தேவையான நீதியை சொல்லிக்கொடுத்தார்கள். அவர்கள் சொன்ன நல்ல விசயம் இன்றைய வரையிலும் இருக்கின்றது. அதன் பிறகு வந்த ஆசிரியர்களில் ஒரு சிலரை தவிர முக்கால்வாசி பேர் எதுவும் சொல்லிதரவில்லை. எதுவும் சொல்லிதரவில்லை என்பதை விட அவர்கள் என்னுடைய வாழ்விற்க்கு தேவையானதை கொடுக்கவில்லை. ஏதோ வந்தார்கள் சென்றார்கள் என்று சொல்லலாம்.

சம்பந்தம் இல்லாமல் ஏன் இதனை சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கலாம். நான் படித்தது பள்ளி கல்வி வரை தான் இதிலேயே எனக்கு கற்றுக்கொடுத்த விசங்கள் எனது வாழ்விற்க்கு சிறிது கூட உதவவில்லை என்று சொல்லவேண்டும். மேற்படிப்பு படித்து இருந்தால் எனக்கு இது உதவுகிறதோ இல்லையோ என்று தெரியவில்லை.

ஒரு கிராமத்தானுக்கு ஆசிரியர் என்ன சொல்லிக்கொடுத்து இருக்கவேண்டும். படிக்காத அப்பா வளர்த்த பிள்ளைக்கு குறைந்தபட்சம் குடும்பம் நடத்துவதற்க்கு தேவையான பொருளாதார தத்துவத்தையாவது சொல்லிக்கொடுத்து இருக்கவேண்டும். அதுவும் கிடைக்கவில்லை. 

இன்றைக்கு முக்கால்வாசி பள்ளிகூடங்களில் நடத்தும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அவர்கள் படித்த படிப்பு நிறைவுசெய்யவில்லை. அவர்கள் நடத்தி நாம் படித்தால் நாம் எப்படி பொருளாதாரத்தை நிறைவு செய்யமுடியும். இரண்டு டிகிரி படித்துவிட்டு நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டு அவர்கள் பாடம் நடத்தினால் எப்படி என்னால் நிறைவான வாழ்க்கை வாழமுடியும். குருவே கஷ்டப்படும்பொழுது சிஷ்யன் நிலை எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

குருவாக வருபவர்களே நிறைவான வாழ்க்கையை வாழமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். இது அவர்களை சொல்லி குற்றமில்லை இந்த நாட்டின் நிலை அப்படி இருக்கலாம்.

ஒவ்வொரு வித கருத்துக்கும் ஒவ்வொரு குருவாக தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய நிலை தற்பொழுது இருக்கின்றது என்று சொல்லலாம். நாமும் ஒவ்வொரு குருவாக பார்த்து அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவேண்டியது நமது நிலை. இந்த இயற்கையை உற்று கவனிக்கும்பொழுது அது நமக்கு நல்லதை சொல்லிக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது.

தற்பொழுது சோதிடத்திற்க்கு வருகிறேன். 

நீங்கள் அனைத்தையும் கற்கவேண்டும் என்றால் அவன் பல ஜென்மங்களை எடுக்கவேண்டும். ஒவ்வொரு ஜென்மத்திலும் படிக்கும் கல்வி அவனோடு வந்துக்கொண்டே இருக்கும் என்று திருவள்ளுவரே சொல்லியுள்ளார்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

இன்றைய ஜென்மத்தில் நீங்கள் ஒரு குருவிடம் கற்கும் வித்தை பல ஜென்மங்களுக்கு அது அப்படியே இருக்கும். முழுமையாக படிப்பதற்க்கு பல ஜென்மங்கள் ஆகலாம். பாக்கியஸ்தானம் அப்படி தான் வேலை செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: