வணக்கம்!
எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ஒன்பதாவது வீட்டில் சனிக்கிரகம் இருந்தது. அவர் சிவன் மேல் தனிஈடுபாடு கொண்டவர். அவருடைய ஈடுபாட்டால் அவர் நிறைய சந்நியாசிகளை சந்தித்தார். அவருக்கு ஒரு குரு கிடைத்தார்.
நண்பரும் நல்ல முறையில் பயின்றுவந்தார். நல்ல பொறுமையோடு அனைத்தையும் கற்றார். அவருடைய குருவும் இவருக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் கற்றுக்கொடுத்தார். நாம் நினைப்போம் ஒன்பதில் சனி இருந்தால் கண்டிப்பாக அவர் மிகுந்த கஷ்டப்படுவார் குரு எல்லாம் கிடைக்கமாட்டார் என்று தான் நினைப்போம்.
நண்பருக்கு குரு கிடைத்தார் ஒன்பதில் சனி இருந்த காரணத்தால் அவருடைய குரு மது அருந்துபவராக இருந்தார். மது அருந்துபவர் எப்படி ஆன்மீகம் கற்றுக்கொடுக்க முடியும் என்று நினைக்கலாம். உண்மையில் அவர் நல்ல சக்தி படைத்தவர். அவர் தான் நண்பரின் ஆன்மீகத்திற்க்கு நல்லமுறையில் உதவியவர் என்றே சொல்லலாம்.
பாக்கியஸ்தானம் கெட்டுவிடும் என்று நாம் சோதிடத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடகூடாது. தேடுதல் இருக்கும்பொழுது கண்டிப்பாக குரு அமைவார்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment