வணக்கம்!
பாக்கியஸ்தானம் எட்டாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்பதை பார்க்கலாம். ஒன்பதாவது வீட்டுக்கு எட்டாவது வீடு விரையம் அதோடு எட்டாவது வீடு மறைவு ஸ்தானம்.
பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டது என்று அர்த்தம் கொள்ள வேண்டியது தான். பாக்கியஸ்தானம் கெட்டாலே ஒன்றும் அந்தளவுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது. வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் நோய் வந்து மருத்துவமனையிலேயே கிடப்பார்கள். கையில் உள்ள பணம் மற்றும் சொத்தை எல்லாம் விற்று மருத்துவம் பார்க்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
வீட்டில் உள்ளவர்கள் அதிகம் இந்த தசாவில் இறக்க கூட நேரிடும். ஒரு சிலருக்கு அப்படி நடக்கவாய்ப்பு இருக்கின்றது. எல்லோரும் பயப்படதேவையில்லை ஒரு சில ஜாதகங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அந்த வீட்டில் அதிகமான இறப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
மறைவு ஸ்தானம் என்றவுடன் மரணத்தை மட்டும் கொடுக்கும் ஒரு செயலை மட்டும் செய்யாது. நல்லதையும் தரக்கூடிய நிகழ்வுகளும் நடக்கும். பல பேர்களுக்கு அதிர்ஷ்டமாக கூட இப்படிப்பட்ட அமைப்பில் நடந்து இருக்கின்றது. யோகம் அடித்தது கூட உண்டு.
ஒரு சிலர் நேர்வழி இல்லாமல் மறைமுகமான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதிரி அமைப்பு இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இதன் பலனை அறியவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment