Followers

Wednesday, January 20, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் கேள்வி கேட்டுருந்தார் அத்தை பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொள்ளலாமா என்று கேட்டார். காதல் திருமணம் என்றாலே அவர்களின் வாழ்க்கை அந்தளவுக்கு சரியாக இருப்பதில்லை. 

ஆன்மீகவாதிகள் பயப்பட்டுக்கொண்டு பல கருத்துகளை வெளியில் சொல்லமாட்டார்கள். வெளியில் இருந்தும் ஏதாவது மிரட்டல் வரும் நமக்கும் கூட்டம் சேராது என்ற காரணத்தால் வெளியில் சொல்லுவதற்க்கு பயப்பட்டுக்கொண்டு சொல்லுவதில்லை.

நான் அப்படி இல்லை எதனையும் வெளிப்படையாக சொல்லுவேன். பிடித்தால் வாருங்கள் பிடிக்காவிட்டால் வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. அனைவரையும் சமமாக பார்ப்பேன். சமமாக பழகுவேன்.  

ஒரு கருத்தை மறைக்ககூடாது. ஏன் செய்யவேண்டாம் என்று சொல்லுகிறேன் என்றால் உங்களின் பிறவி சங்கிலியை விட்டு வெளியில் சென்றுவிடுவீர்கள் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். அதே நேரத்தில் உங்களின் அத்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நல்ல மருத்துவபரிசோதனை செய்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.

என்னை கேட்டால் காதல் திருமணம் என்பதை செய்யாமல் இருந்தால் நல்லது என்பேன். எத்தனையோ நல்ல கருத்தை சொல்லியதால் அதனை நீங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தான் இத்தனை வருடம் பின் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். உங்களுக்கு பெரிய ஒரு நல்லது செய்யவேண்டும் என்றால் இதனை தான் நான் சொல்லுவேன். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம் மட்டும் செய்து வைக்காதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு