வணக்கம்!
பாக்கியஸ்தான அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது இறப்பு சம்பந்தமான பணவரவுகள் வரும். பணவரவு அதிகப்பட்சமாக வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.
எனக்கு தெரிந்த ஒரு நபர் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். அவரின் அக்கா வீட்டு பையன் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தன.
அவர் குடும்பத்தோடு செல்லும்பொழுது ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரின் மனைவி மற்றும் அவரின் பையனும் அந்த விபத்தில் இறந்துவிட்டார்.
அக்கா மற்றும் அக்கா கணவர் இருவரையும் தன்னிடம் அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்தார். அவர்கள் சொத்து அனைத்தையும் இவரிடம் கொடுத்துவிட்டு எங்களை கடைசி வரை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள்.
இவருக்கு பெரிய அளவில் பணம் கிடைத்தது. தற்பொழுது நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். நண்பருக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருந்தது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment