வணக்கம்!
தொழிலாளியை எப்படி அமைவார் என்பதைப்பற்றி நேற்று பார்த்தோம். இன்றும் அதனைப்பற்றி பார்க்கலாம்.
ஒரு சிலரின் ஜாதகத்தில் நல்ல பாக்கியம் பெற்று அவர்களுக்கு சிறப்பான தொழில் அமைந்துவிடும். அந்த தொழில் வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கும். பொதுவாக நம்ம ஆளுங்க தொழிலில் அந்தளவுக்கு திறமை எல்லாம் இருக்காது. ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலைமையில் அமைந்ததால் தொழில் நன்றாக சென்றுக்கொண்டிருக்கம்.
முதலாளிக்கு அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு தொழில் அமைந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டாடத்தில் இருப்பார், கொஞ்ச காலம் நன்றாக செல்லும் அதன் பிறகு அங்குள்ள தொழிலாளியால் அந்த தொழில் வீழ்ச்சி அடையசெய்யும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் தோல்வியை சந்தித்துவிடும்.
இன்றைக்கு இருக்கும் தனியார் நிறுவனங்களில் நடக்கு விசயம் இது தான். பல தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திப்பதே அவர்கள் தொழிலை கண்டுக்கொள்ளாத நிலை தானே தவிர வேறு ஒன்றும் பெரிய விசயமாக இருக்காது.
நீங்களே ஒரு பைக் வாங்கி பாருங்கள். அதற்கு ஒழுங்கான சர்வீஸ் செய்து தரமாட்டார்கள். வாங்கிய பிறகு நீ என்ன ஆனாலும் சரி என்று ஏனோ தானோ என்று இருப்பார்கள். முதலாளிக்கு இது தெரியவே தெரியாது ஆனால் அங்குள்ள தொழிலாளி முதலாளியை இப்படி பலிவாங்கிவிடுவான்.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நமக்கு பாக்கியம் இருந்தாலும் அதனை காப்பாற்ற தெரிந்துவைத்திருக்கவேண்டும். நமக்கு தான் தொழிலை கடவுள் கொடுத்துவிட்டாரே என்று இருந்துக்கொண்டு இருந்தால் நம்ம கதி அவ்வளவு தான். கொடுத்த பாக்கியத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment