Followers

Tuesday, January 26, 2016

தந்தை வழி சொத்து


வணக்கம்!
          தந்தை வழி சொத்துகளை குறிக்கும் ஒன்பதாவது வீடு எட்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது தந்தை வழிச்சொத்துகள் பிரச்சினையை கொடுக்ககூடிய வகையில் இருக்கும்.

தந்தை வழி சொத்துக்கள் இன்றைய தேதியில் கிராமங்களில் எல்லாம் வம்பு வழக்குகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. ஒரு ஊரில் ஐம்பது வீடுகள் இருந்தால் அதில் நாற்பது வீடுகளின் சொத்துக்கள் வம்பு வழக்குகளை சந்திக்கிறது.

கொஞ்ச காலத்திற்க்கு முன்பு பஞ்சாயத்து செய்து தீர்த்து வைத்தனர். இன்றைய காலத்தில் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வருவதற்க்குள் ஒரு தலைமுறையே வாழ்ந்து முடித்துவிடுகிறது.

கோர்ட்டில் வழக்கு இழு இழு என்று இழுத்தடிக்கும் செயல் எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு ஜாதகத்தில் இருக்கும். இதற்கு பேசியே அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம்.

ஜாதகத்தை பார்த்து ஜாதகத்தில் எப்படி கிரகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொண்டு அதன்படி நாம் வாழகற்றுக்கொண்டால் இதனை எல்லாம் தவிர்க்கலாம். யார் இதனை எல்லாம் பார்க்கிறார்கள் இரத்தம் இருக்கின்ற வரை வம்புக்கு தானே நிற்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு