Followers

Wednesday, January 20, 2016

பயணம் வரும் வழி


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் களத்திரஸ்தான அதிபதி சம்பந்தப்படும்பொழுது எப்படி இருக்கும் என்று நேற்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கலாம்.

ஒரு சில நண்பர்களின் ஜாதகத்தை பார்க்காமலே அவர்களைப்பற்றி தெரியவரும். அவர்கள் செய்துக்கொண்டிருக்கும் வேலையை வைத்தே நாம் ஒரளவு புரிந்துக்கொள்ளலாம். அடிக்கடி பயணம் மேற்க்கொண்டு இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது.

தொடர்பயணங்களை செய்துக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு சென்று ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் தங்கிவிட்டு மறுபடியும் அடுத்த நாட்டிற்க்கு சென்றுக்கொண்டு இருப்பார்கள்.

பல நண்பர்களை நான் ஏர்போர்ட்டிற்க்கு சென்று சந்தித்தது உண்டு. ஒரு நாட்டிற்க்கு செல்லும்பொழுது அப்படியே ஏர்போர்ட்டிற்க்கு வரச்சொல்லுவார்கள். அவர்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். அவ்வளவு பிஸியாக இருக்கும் நபர்களாக இருப்பார்கள். 

வெளிநாட்டையும் அடிக்கடி பயணத்தை காட்டும் இடமாக இருப்பதாலும் அதே நேரத்தில் ஆன்மீகத்தை காட்டக்கூடிய இடமாக இருப்பதாலும் இப்படி இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: