Followers

Monday, January 18, 2016

தடைகள் விலகும்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எப்படி இருந்தாலும் அதாவது எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதனை நன்மை தரும் பாக்கியமாக மாற்றும் சக்தி நம்மிடம் தான் இருக்கின்றது.

பாக்கியஸ்தானத்தில் நன்மை தரும் கிரகம் இருந்தால் தான் நமக்கு நன்மை அதிகம் தரும் என்று நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் கெடுதல் கிரகங்கள் இருந்தாலும் நன்மை கிடைக்கும். 

நன்மை தரும் கிரகங்கள் இருந்தால் அப்பன் சொத்தை உட்கார்ந்துக்கொண்டு சாப்பிடும் ஆளாக இருப்பார்கள். கெடுதல் கிரகம் இருந்தால் அவர்களே உழைத்து பெரிய ஆளாக வருவார்கள். 

ஒருத்தர் சம்பாதித்த பணத்தை செலவு செய்தால் அதில் போகத்தின் அனுபவத்தை மட்டுமே காண்பார்கள். தான் உழைத்து சம்பாதிப்பவர்களுக்கு உலகத்தின் அனுபவம் கிடைக்கும். 

கெடுதல் கிரகங்கள் உள்ளவர்களை பார்த்தால் அவர்களே ஆன்மீகத்தை தேடி சென்று அனைத்திற்க்கும் வழி என்ன என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் ஒன்பதில் ராகு இருக்கும் நபர்களை பாருங்கள் அதிக ஆன்மீக நாட்டம் இருக்கும். அதனால் கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்ல நிலைமைக்கு வரமுடியும். 

ஒவ்வொருவரும் பின்பற்றும் ஆன்மீகத்தை சார்ந்த ஒரு விசயமாகவே பாக்கியஸ்தானம் இருக்கின்றது. ஆன்மீகத்தை பின்பற்றி வாழ்வை எதிர்நோக்கும்பொழுது அனைத்து தடைகளும் நீங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: