வணக்கம்!
கல்விக்கு உதவவேண்டும் என்று நேற்று சொன்னேன். கல்வி சம்பந்தப்பட்ட விசயமாக ஒன்றை சொல்லவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தது இன்று அதனை எழுதுகிறேன். அப்படி என்ன பெரிய பொக்கிஷம் என்று நினைக்கலாம். உண்மையில் பொக்கிஷமான விசயம் தான் அது.
நமக்கு தெரிந்த பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் என்னிடம் தனிப்பட்ட விசயமாக சொல்லும் கருத்தை தான் நான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். அந்த கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் என்னிடம் சொல்லுவார்கள்.
பெற்றோர்கள் சம்பாதிக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களின் வேலையை காரணம் காட்டி அவர்களின் பெற்றோர்கள் தங்களின் கல்வி நிறுவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைத்துவிடுகின்றனர.
நாங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு தங்கும் இடம் மற்றும் நல்ல கல்வியை கொடுத்துவிடுகிறோம் ஆனால் அவர்கள் வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அவர்கள் இந்த சமுதாயத்திற்க்கு நிறைய தீங்கு செய்பவர்களாக மாறிவிடுவார்கள் என்றார்கள்.
மனது ரீதியாக கடுமையான பாதிப்பை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நல்ல படித்து பெரிய ஆளாக வருவார்கள் ஆனால் அவன் ஒரு சைக்கோவாக இருப்பான் என்றார்கள். சைக்கோ என்றால் நமக்கு படத்தில் வரும் கொலையாளி நினைப்பு வரும். அது மட்டும் கிடையாது. பல விதத்திலும் இருக்கிறார்கள்.
நான் நமது ஜாதககதம்பத்தில் வரும் பல நண்பர்களை கவனித்து இருக்கிறேன். இவர்கள் அனைவரும் பெரிய கல்வி நிறுவனங்களில் தங்கும்விடுதியில் தங்கி படித்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு விதத்தில் மெண்டல் போல இருப்பார்கள்.
கல்லூரி காலத்தில் வேண்டுமானால் தங்கும் விடுதியில் தங்கி படிக்கட்டும் ஆனால் இளம்கல்விலேயே தங்கும் விடுதியில் தங்க வைக்கவேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கோடி கோடியாக நீங்கள் சம்பாதித்தாலும் உங்களின் வாரிசுகள் நன்றாக இருந்தால் தான் அவர்கள் இதனை எல்லாம் கட்டி காப்பாற்றி அவர்கள் வாழ்வார்கள்.
நான் சம்பாதிக்கிறேன் என்று நீங்கள் அவர்களை விட்டுவிடாதீர்கள். வாழ்வது ஒரு முறை அது உங்களின் வாரிசுகளோடு நாள்தோறும் வாழ்ந்துவிடுங்கள். ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தோம் என்று ஒரு திருப்தி இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Perfect sir..
Post a Comment