வணக்கம்!
நமது கர்மாவை எல்லாம் நீக்கி நமக்கு நல்லதை கொடுப்பது நாம் ஆத்மாவிற்க்கு கொடுக்கும் பயிற்சியை பொறுத்தது. மருந்து நமது உடலை காக்கும். தியானம் நமது ஆத்மாவை காக்கும் என்பது ஒரு பழமொழி.
உங்களின் ஆத்மாவை காக்க பல வழிகளை நான் சொல்லிருக்கிறேன். அதில் ஒன்று தான் நான் இப்பதிவில் சொல்லபோகும் ஒரு விசயமும் உங்களின் ஆத்மாவின் கர்மாவை போக்கி உங்களுக்கு நல்லதை செய்யும் ஒரு கருத்து.
எப்பொழுது அதிகபிரச்சினை வருகின்றது என்று நினைக்கின்றீர்களோ அந்த காலத்தில் ஒரு ஞானியின் புத்தகத்தை எடுத்து படியுங்கள். உங்களுக்கு வந்த பிரச்சினை போய்விடும். ஒய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட புத்தகத்தை எடுத்து படித்தால் போதும் உங்களுக்கு நல்ல புத்துணர்வை கொடுக்கும்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகமாக இருந்தால் அது ஆத்மாவை சுத்தப்படுத்தும். அவசரத்திற்க்கு ஒரு புத்தகத்தை நீங்கள் எப்பொழுதும் உங்களோடு எடுத்து சென்று போனால் அது உங்களுக்கு நன்றாக பயன்படும்.
ஒரு சில மதங்களில் வியாபாரம் செய்பவர்கள் தொழில் நடக்கவில்லை என்றால் உடனே அவர்களின் புனிதநூலை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு அவர்களுக்கு தொழில் நடக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்கு எது புனிதமானது என்று தோன்றுகிறதோ அதனை நீங்கள் செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
super.
Post a Comment