Followers

Wednesday, May 24, 2017

மனதை சுத்தப்படுத்துவது எப்படி?


ணக்கம்!
         உடல் சுத்தப்படுவதோடு மனதையும் சுத்தப்படுத்த வேண்டும். மனதையும் சுத்தப்படுத்திக்கொள்ளும்பொழுது கண்டிப்பாக நீங்கள் செய்யும் அனைத்து வழிபாடும் மற்றும் பரிகாரங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

ஒரு சின்ன பயிற்சியை சொல்லுகிறேன். அதனை ஒரு மாத காலம் செய்து வாருங்கள். அதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாதகாலத்திற்க்கு பிறகு எனக்கு தெரிவியுங்கள். கண்டிப்பாக நல்ல மாற்றம் இருக்கும்.

நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் உங்களின் மொபைல் போனை தொடாதீர்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டும் அதனை தொடுங்கள். நாம் தனிமையில் இருக்கும்பொழுது ஏகாப்பட்ட வெறுப்புகள் வரும். அந்த வெறுப்புகளை நீங்கள் எதிர்க்கொள்ளவேண்டும். 

வெறுப்புகளை தவிர்ப்பதற்க்கு தான் மனிதன் பல போதைப்பொருட்கள் டிவி என்று அனைத்து விதமான பொழுதுபாேக்கு அம்சம் மற்றும் தன்னை பாழ்ப்படுத்தும் விசயத்தை எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறான்.

கொஞ்சம் உங்களோடு இருக்க ஆரம்பித்தால் உடனே வெறுப்பு வந்துவிடும். நீங்கள் செல்போனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுவீர்கள் அல்லது டிவி ஆன் செய்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களின் வெறுப்பை நீங்கள் எதிர்நோக்கவேண்டும்.

வெறுப்பை எதிர்நோக்கினால் பலவிதத்திலும் நீங்கள் துன்பப்பட நேரிடும். பரவாயில்லை அதனை எதிர்நோக்குங்கள். கொஞ்ச காலத்தில் இருக்கின்ற கர்மா முழுவதும் தீர்ந்துபோய்விடும் அதன் பிறகு நீங்கள் புதுமனிதனாக மாறிவிடுவீர்கள். நல்ல தெளிவு கிடைத்துவிடும்.

நான் தனிமையில் இதனை கடுமையாக எதிர்நோக்கியிருக்கிறேன். அந்த எதிர்நோக்கத்தினால் தான் என்னை அனைத்திலும் சரி செய்துக்கொள்ள முடிந்தது. நமக்கு வரும் துன்பத்தை நாமே அனுபவித்துவிடவேண்டும் என்று நான் எதிர்நோக்கினேன் அனைத்தும் சரி செய்ய முடிந்தது.

கர்மா என்பதே இப்படி தான் நாம் எதிர்நோக்காமல் வேறு விதத்தில் டைவர்ட் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இன்று செல்போன் கொஞ்சகாலம் முன்னாடி டிவி. இதனை வைத்து தான் நமது கர்மாவை நாம் எதிர்நோக்காமல் போய்விட்டோம். 

சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அனைத்து பொழுதுபோக்கும் விசயத்திலும் ஈடுபடுங்கள். போர் அடிக்கும் நேரத்தில் உங்களோடு இருக்க ஆரம்பியுங்கள். கொஞ்சகாலம் இதனை செய்துவிட்டு என்னை நீங்களே தொடர்புக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: