வணக்கம்!
நேற்று மாந்தி பரிகாரம் செய்தேன். நிறைய ஜாதகங்கள் மீதி இருக்கின்றன. இன்று மாந்தி பரிகாரம் செய்யவில்லை இரண்டு நாட்கள் தானம் செய்ய அவகாசம் கொடுத்திருந்தேன். அதனை எல்லாம் செய்துவிடுங்கள். இன்று ஒரு மதுரை செல்கிறேன். இன்றே திரும்பிவிடுவேன்.
நிறைய நண்பர்கள் ஏற்கனவே பலருக்கு வருடதோறும் கல்வி உதவி செய்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னார்கள். நல்ல விசயம் தான் அது. வருடம் தோறும் அதனை செய்துக்கொண்டே இருங்கள்.
மாந்தி பரிகாரம் செய்யும்பொழுது பல ஜாதகங்களை பார்க்க நேர்ந்தது அது மாந்தியால் வந்த பிரச்சினை இல்லை. ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தான் பிரச்சினை செய்யும் அதனை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதனை உட்கார்ந்து நன்றாக அலசிப்பார்க்கும்பொழுது மட்டுமே அது தெரியவரும்.
இங்கு வரும் அனைவருக்கும் சோதிடம் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து உங்களின் வாழ்க்கையும் உங்களின் ஜாதகத்தின் நிலைமையும் அலசி பாருங்கள். கண்டிப்பாக அதற்கு ஒரு விடை உங்களுக்கு கிடைக்கும்.
மாந்தி நான் நல்லமுறையில் பரிகாரம் செய்திருக்கிறேன். இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் மாந்தி பரிகாரம் செய்து முடித்துவிடுவேன். தானம் செய்யாதவர்கள் உடனே செய்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment