வணக்கம்!
சனிக்கிழமை அன்று இரவு தான் மதுரை பயணம் முடிவானது. மதுரையில் ஒரு நண்பரை சந்திக்க சென்றேன். செல்லும் நேரத்தில் நண்பர் கோபி அவர்கள் போன் செய்தார். அவரையும் சந்திக்கலாம் என்று நீங்கள் மாட்டுதாவணி வந்துவிடுங்கள் என்று சொன்னேன்.
அவர் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். மதுரையில் உள்ள நண்பரை அரைமணிநேரம் சந்தித்து பேசிவிட்டு உடனே பழனி செல்லவேண்டும் என்று திட்டமிட்டு உடனே பயணத்தை தொடங்கிவிட்டோம்.
பழனி பயணம் மதுரை இறங்கும் வரை எந்த ஒரு திட்டமும் இல்லை. மதுரையில் இறங்கிய பிறகு தான் பழனி போகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பழனி முருகன் ஏதோ ஒன்றுக்காக நம்மை அழைக்கிறார் என்று சென்றேன்.
பழனி சென்று ஒரு மாதம் கூட ஆகவில்லை மறுபடியும் பழனி முருகன் அழைத்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மாலை நல்ல தரிசனம் முடிந்து மறுபடியும் மதுரை வந்தோம். சனிக்கிழமை இரவே மதுரையில் இருந்து கிளம்பிவிட்டேன். பயணகளைப்பில் நேற்று முழுவதும் பதிவை கொடுக்கமுடியவில்லை.
பொதுவாக எந்த ஒரு திட்டமும் இல்லாமல் பழனி சென்றது வியப்பான ஒன்று தான். பழனியில் தமிழர்களை விட கேரளாவில் இருந்து வருபவர்கள் தான் அதிகம். கோவில் முழுவதும் மலையாள மொழி பேசுபவர்கள் தான் இருக்கின்றனர்.
தமிழர்கள் விஷேசமான நாளில் காவடி பால்குடம் மட்டும் எடுத்துக்கொண்டு தரிசனம் செய்வதோடு சரி என்று நினைக்கிறேன். மற்றபடி அங்கு செல்வதில்லை என்று தான் தோன்றுகிறது. உங்களின் ஆன்மீகபயணத்தில் அடிக்கடி பழனி சென்று வாருங்கள். நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment