வணக்கம்!
மாந்தி பதினோராவது வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்துவிடும். துணிச்சலாக பல காரியங்களை செய்ய வல்ல ஆற்றலை மாந்தி கொடுக்கும்.
மாந்தி பதினோராவது வீட்டில் உள்ளவர்கள் பெரிய தொழிற்சாலையை தொடங்கி வெற்றி காண்பார்கள். ஒரு சிலர் பெரிய தொழிற்சாலையில் வேலை செய்வார்கள்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமை இருந்தால் பெரிய காரியத்தை செய்யமுடியும் அப்படி இல்லை என்றால் பெரிய இடத்தில் வேலை செய்யமுடியும். தொழில் அல்லது வேலை என்பது அவர் அவர்களே முடிவு செய்யவேண்டும்.
உங்களுக்கு பதினோறாவது வீட்டில் மாந்தி இருந்தால் தைரியமாக செயல்பட்டு ஒரு பெரிய தொழிற்சாலையை தொடங்குங்கள். கையில் பொருளாதாரம் இல்லை என்று பயம்கொள்ள தேவையில்லை. எப்படியும் பணம் வரும் என்று தைரியமாக தொடங்குங்கள். வெற்றி பெறலாம்.
மாந்தி பதினோறாவது வீட்டில் இருந்தால் உங்களின் மூத்தவர்கள் உங்களை வைத்து அவர்கள் பயன்பெறுவார்கள். அவர்களால் உங்களுக்கு ஒன்றும் நடக்காது. மற்றபடி மாந்தி பதினோறாவது வீட்டில் இருப்பது நன்மை.
பதினோறாவது வீட்டில் மாந்தி இருப்பதற்க்கு பரிகாரம் செய்யவேண்டுமா என்று கேட்கலாம். மாந்தி பதினோறாவது வீட்டில் அதிக நன்மை செய்யவேண்டும் என்றால் பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment