வணக்கம்!
கர்மாவைப்பற்றி பதிவை எழுதியவுடன் நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டார். சோதிடர்களால் கர்மாவை முழுமையாக நீக்கமுடியுமா என்று கேட்டார்.
சோதிடர்களால் கர்மாவை நீக்கமுடியாது. உங்களுக்கு கர்மா வேண்டுமானால் சோதிடர்களால் கொடுக்கமுடியும். சோதிடனிடம் உள்ள கர்மா உங்களுக்கு வந்து சேரும். கர்மாவை நீக்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு சோதிடர்கள் கர்மாவோடு இருக்கின்றனர் என்பது தான் உண்மை.
சோதிடதொழிலே அதிக பொய்நிறைந்த ஒரு தொழிலாக மாறிக்கொண்டு வருகின்றது. அடுத்தவன் கர்மா எல்லாம் நீக்க முடியும் என்றால் மனிதப்பிறப்பே என்பது இருக்காது என்பது தான் உண்மையாக இருக்கமுடியும்.
நாங்கள் சொல்லும் கர்மா எல்லாம் சிறிய அளவில் கர்மாவாக தான் இருக்கும். நம்மிடம் அம்மன் இருப்பதால் அதனை வைத்து வருகின்றவர்களுக்கு ஏதோ நல்லது செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அது கர்மா நீக்கும் செயல் எல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலை தானே தவிர மனிதனின் கர்மாவை முழுமையாக நீக்கும் வேலை எல்லாம் கிடையவே கிடையாது.
அம்மனை வைத்து செய்யும்பொழுது உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை தாக்க ஆரம்பிக்கிறது. அதனை சரி செய்ய ஒரு நல்ல செயலை செய்யவேண்டியுள்ளது. அதனை போக்க தான் உங்களையும் நல்லது செய்யுங்கள் என்று சொல்லுகிறேன். முழுமையான கர்மா நீக்கினால் அடுத்த நொடி நீங்கள் இந்த பூமியில் இருந்து போய் சேர்ந்துவிடுவீர்கள்.
உங்களுக்கு நீங்களே நல்லது செய்யும் செயலுக்கு தான் நீங்களே பல ஆன்மீக பணிகளை செய்ய வைக்கிறோம். அது உங்களிடம் இருந்தே நடக்கவேண்டும் என்பதற்க்கு சொல்லுகிறோம். உங்களின் கர்மாவை தீர்க்கிறோம் என்று சொல்லவில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment