வணக்கம்!
பரிகாரத்திற்க்கு முன்பாக ஒன்றைப்பற்றி பார்த்துவிடலாம். பரிகாரம் செய்யும் அனைவரும் நன்றாக தான் செய்வார்கள். நீங்கள் எந்த சோதிடர்களிடம் சென்றாலும் நன்றாக தான் செய்வார்கள் ஆனால் நமக்கு நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் நம்முடன் இருக்கும் அந்த விஷம் தான் காரணமாக இருக்கும்.
பரிகாரம் செய்தால் அதனையும் தானே சேர்த்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதனையும் சேர்த்து எடுப்பதற்க்கு நீங்களே பல நல்ல பணிகளை செய்து உங்களின் தோஷத்தை போக்கிக்கொள்ளவேண்டும். தோஷ உடலில் இருப்பது பரிகாரம் வேலை செய்யாமல் போவதற்க்கு வழி வகுக்கும்.
ஒவ்வொரு மாதமும் நாம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்துக்கொணடு வருகிறோம். ஒவ்வொரு பரிகாரமும் நன்றாக நான் செய்கிறேன். உங்களிடம் இருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்ய நீங்கள் உடலை சுத்தப்படுத்த வேண்டும்.
உடலை என்று சொல்லுவது உங்களின் தோஷத்தை தான் சுத்தப்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறேன். உங்களின் உடலை சுத்தப்படுத்த பல வழிகளை நான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் கடைபிடித்தால் போதும் உடல் சுத்தமாகிவிடும். நான் செய்யும் பரிகாரம் உடனே உங்களுக்கு நடக்கும்.
ஏதோ பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பிவிட்டோம். நமக்கு எல்லாம் இனி நடந்துவிடும் என்று எண்ணவேண்டாம். உங்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment