வணக்கம்!
நேற்று பிரதோஷம் அந்த நேரத்தில் நான் கோவிலுக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த காரணத்தால் வீட்டில் அமைதியாக அமர்ந்துவிடுவது உண்டு. எப்பொழுதும் கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பிரதோஷகாலத்தில் நான் அமைதியாக அமர்ந்திருப்பேன்.
வெறுமையாக அமர்ந்திருப்பது அந்த நேரத்தில் மிகவும் பிடிக்கும். அப்பொழுது ஒரு எண்ணம் வந்தது. சித்தர் கோரக்கரைப்பற்றிய ஒரு சிந்தனை அப்பொழுது எனக்குள் வந்தது. எப்பொழுதும் அப்படி வருவதில்லை ஆனால் அந்த நேரத்தில் எனக்கு வந்தது அவரின் அருளால் கூட இருக்கலாம்.
கோரக்கர் சித்தர் கார்த்திக்கை மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்ற செய்தி தெரியவந்தது. கண்டிப்பாக இதற்கு முன்னாடி எனக்கு அதனைப்பற்றிய அறிவு கிடையாது. நேற்று வந்தவுடன் அதனை பற்றி தேடும்பொழுது இந்த செய்தியும் ஒன்றாக இருந்தது.
கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் 7 ஆம் தேதி வருகின்றது. அன்றைய தினத்தில் நாம் அவரை நமது பூஜையில் மனதார பிராத்திக்கலாம். கோரக்கர் குருபூஜை அந்த நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை என்று தெரிகிறது. நமக்கு தேவை அந்த நாளில் நமது வீட்டு பூஜையறையில் அவரை மனதார பிராத்தனை செய்தால் போதும்.
தமிழ்நாட்டில் சித்தர்கள் பேரை சொல்லி நடக்கும் வியாபாரம் மற்றும் தவறுகள் அதிகம். நாம் அப்படி எல்லாம் செய்யவேண்டியதில்லை. அவர் அவர்களின் வீட்டில் உள்ள பூஜையறையில் நாம் ஒரு சின்ன வழிபாட்டை செய்தால் போதும்.
இந்த தகவலை கொடுக்கலாமா என்று முதலில் கூட நான் யோசித்தேன். சரி பிரதோஷ வேளையில் ஒரு விசயத்தை நமக்கு அறிவுறுத்துகிறது என்றால் நம்மால் பிறர்க்கு தெரிய வைக்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கும் என்பதால் தெரியப்படுத்துகிறேன். கோரக்கர் மற்றும் சித்தர்களின் மேல் விருப்பம் இருப்பவர்கள் இதனை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment