வணக்கம்!
ஒருவர் தன்னுடைய பிள்ளைக்களுக்கு சொத்து சேர்க்கிறார்களோ இல்லையோ புண்ணியத்தை அதிகம் சேர்த்துவிடவேண்டும். இதனை பல பதிவுகளில் சொல்லிவருகிறேன். இதற்க்கும் நான் கண்ட அனுபவம் தான் முக்கியமாக இருக்கின்றது.
பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் அதோடு அவர்களுக்கு சொத்துகளை சேர்த்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதில் தவறு இல்லை ஆனால் அந்த குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவேண்டும் அவர்களுக்கு சரியான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொடுக்கவேண்டும்.
உங்களின் பிள்ளைகள் கடைசி வரை உங்களின் பேச்சையும் கேட்டு அதன்படி கடைசி வரை நடக்கவேண்டும். ஒரு சில விசயத்தில் உங்களின் பேச்சை கேட்காமல் இருந்தால் கூட முக்கியமான விசயத்தில் எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவை தான் அவர்கள் கடைசிவரை கேட்கவேண்டும்.
இதற்கு ஆன்மீகவழியில் நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
உங்களின் ஒய்வு நேரத்தில் எல்லாம் அருகில் இருக்கும் சிவாலயங்கள் சென்று அங்கு சிவனை நன்றாக பார்த்து வணங்கி வாருங்கள். அம்மன் கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு சில ஆன்மீகத்தில் இருப்பவர்களின் பிள்ளைகள் கூட மோசமாக போய்விடுகிறது. அதற்கு அவர்களின் குரு சரியில்லை அல்லது குருவை மதிக்கவில்லை என்று அர்த்தம். குருவிடம் மரியாதை இருந்தால் பிள்ளைகள் வீணாக போய்விடமாட்டார்கள்.
உங்களின் இப்பிறவியை சரியாக பயன்படுத்தவேண்டும் என்றால் குருவிடம் பணிந்து உங்களின் ஆன்மீகபயணம் இருக்கவேண்டும். நிறைய கோவில்களை தரிசனம் செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment