வணக்கம்!
சந்திரன் மனக்காரகன் என்று சொன்னாலும் ஒரு சில இடத்தில் சுக்கிரன் மனக்காரகன் என்றும் சொல்லுவார்கள். சுக்கிரனை மனக்காரகன் என்று சொல்லுவதின் அர்த்தம் மனது தெளிவாக இருக்காதவாறு செய்வதில் சுக்கிரன் கில்லாடி என்று சொல்லலாம்.
சுக்கிரனின் பலன் இல்லாமல் இருந்தால் ஒருவருக்கு முடிவு எடுப்பதில் அதிக தடுமாற்றம் ஏற்படும். அவரால் எந்த தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி சரியான ஒரு முடிவை எட்டப்படாமலே இருப்பார்கள்.
பொதுவாகவே இரு குருவாக இருப்பவர்களின் பலன் நன்றாக இருந்தால் தான் அவரால் நல்லமுடிவை எடுக்கமுடியும். குருவும் நன்றாக இருக்கவேண்டும் சுக்கிரனும் நன்றாக இருக்கவேண்டும். இருவரில் ஒருவர் சரியில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாக இருக்காது.
சுக்கிரனின் பலன் இல்லாதவர்கள் ஜாதகத்தை வாங்கி அவர்களிடம் ஏதாவது ஒன்றை சொல்லி இதனை செய் என்று சொல்லுங்கள். அவர்கள் ஒரு போதும் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனை செய்யவும் மாட்டார்கள்.
சுக்கிரனின் நிலையை உங்களின் ஜாதகத்தில் கவனித்துவிட்டு அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்த்து செய்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment